Home
Mobile

மிரட்டலான சியோமி ரெட்மி கோ முழு விபரம் & விலை என்ன தெரியுமா?

சியோமி நிறுவனம் வியாழன் அன்று ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்திருந்தது. அதன்படி விரைவில் சியோமி நிறுவனத்தின் 48 மெகா பிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித

சியோமி நிறுவனம் வியாழன் அன்று ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்திருந்தது. அதன்படி விரைவில் சியோமி நிறுவனத்தின் 48 மெகா பிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தது.

அனைவரின் கவனமும் சியோமி ரெட்மி நோட் 7 இன் மீது உள்ள நிலையில், தற்பொழுது சியோமி ரெட்மி கோ ஸ்மார்ட்போன் பற்றிய முழு விபரங்கள் வலைத்தளத்தில் லீக் ஆகி வைரல் ஆகிவருகிறது.

சியோமி ரெட்மி கோ

சியோமி ரெட்மி கோ

சியோமி ரெட்மி கோ ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் கடந்த சில மாதங்களில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சியோமி நிறுவனத்தின் அடுத்த புதிய மாடலான சியோமோ கோ ஸ்மார்ட்போன் இன் புகைப்படம் மற்றும் அதன் முழு விபரங்களும் வலைத்தளத்தில் கசிந்துள்ளது.

ஒரு கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி கோ

ஒரு கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி கோ

சியோமி ரெட்மி கோ ஒரு மிக அடிப்படை மாடலான ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஸ்மார்ட்போன் முன் மற்றும் பின்பக்கங்களில் ஒரே ஒரு கேமராவுடன் களமிறங்கவுள்ளது. ரெட்மி கோ ஸ்மார்ட்போன் பார்ப்பதற்கு ரெட்மி 5A போல் உள்ளது ஆனால் நாட்ச் இல்லாமல் தடிமனான பெசல் மற்றும் சிறிய திரையுடன் வெளிவரும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி கோ முழுவிபரங்கள்:

சியோமி ரெட்மி கோ முழுவிபரங்கள்:

- 5' இன்ச் 16:9 விகிதத்துடன் கூடிய 1280 x 720 பிக்சல் கொண்ட எல்சிடி டிஸ்பிளே

- குயல்காம் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்
- அட்ரீனோ 308 ஜிபியு 4x ARM கோர்ட்டெக்ஸ் A53 கோர்
- 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- எஸ்.டி கார்டு மூலம் 128 ஜிபி வரை விரிவாக்க சேமிப்பு
- 8 மெகா பிக்சல் முன்பக்க கேமரா
- 5 மெகா பிக்சல் பின்பக்க கேமரா
- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
- 3000 எம்.ஏ.ஈத் பேட்டரி

விலை:

விலை:

சியோமி இன் இந்த புதிய சியோமி ரெட்மி கோ ஸ்மார்ட்போன் நிச்சயம் பட்ஜெட் விலையில் வெளியிடப்படுமென்பதில் எந்த சந்தேகமுமில்லை. குறிப்பாக இதில் பயன்படுத்தப்பட்டுள்ள சிப்செட் மற்றும் சேமிப்பு சேவையைக் கருத்தில் கொண்டு இந்திய சந்தையில் சுமார் ரூ.4,999 முதல் ரூ.5,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படுமென்று ஏதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Go Leaked in Pictures Full Specs Also Revealed : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X