பட்ஜெட் விலையில் சூப்பர் ஸ்மார்ட்போன் சியோமி ரெட்மி கோ.! விலை என்ன தெரியுமா?

|

சியோமி நிறுவனம், தனது புதிய ரெட்மி கோ ஸ்மார்ட்போன் மாடலை இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வரும் மார்ச் 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது சியோமியின் முதல் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி ரெட்மி கோ

சியோமி ரெட்மி கோ

சியோமி ரெட்மி கோ ஸ்மார்ட்போன் 5' இன்ச் எச்.டி. டிஸ்பிளேயுடன் கூடிய ஸ்னாப்டிராகன் 425 பிராசஸருடன் விற்பனைக்குக் களமிறங்குகிறது. சியோமி ரெட்மி கோ ஸ்மார்ட்போன் 1 ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி வெறியன்ட், 1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் என இரண்டு மாடல்களை வெளியாகிறது.

கேமரா

கேமரா

8 மெகா பிக்சல் பிரைமரி பின்பக்க கேமராவுடன் கூடிய பின்பக்க எல்இடி பிளாஷ், 5 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா சேவையுடன் விற்பனைக்கு வருகிறது.

சியோமி ரெட்மி கோ சிறப்பம்சங்கள்:

சியோமி ரெட்மி கோ சிறப்பம்சங்கள்:

- 5' இன்ச் கொண்ட 1280x720 பிக்சல் உடைய எச்.டி டிஸ்பிளே

- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்

- அட்ரினோ 308 GPU

- 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு

- 1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு

- எஸ்.டி கார்டு மூலம் கூடுதல் சேமிப்பு வசதி

- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

- டூயல் சிம்

- 8 மெகா பிக்சல் பின்பக்க பிரைமரி கேமரா

- 5 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா

- எல்இடி பிளாஷ்

- 4ஜி வோல்ட்இ

- வைபை

- ப்ளூடூத் 4.1

- 3000 எம்.ஏ.எச் பேட்டரி

விலை

விலை

சியோமி ரெட்மி கோ ஸ்மாரட்போன் இந்தியச் சந்தையில் வெறும் ரூ.5,240 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி ரெட்மி கோ ஸ்மாரட்போன் பிளாக் மற்றும் ப்ளூ நிறத்தில் விற்பனைக்குக் கிடைக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Go affordable smartphone gets this India launch date : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X