சியோமி ரெட்மி 9 ஏ மற்றும் 'ஸ்பெஷல்' ரெட்மி 9 சி மாடல்கள் விரைவில் அறிமுகம்!

|

சியோமி நிறுவனம், சமீபத்தில் ரெட்மி 9 ஸ்மார்ட்போனை ஸ்பெயின், மலேசியா மற்றும் சீனா போன்ற பல சந்தைகளில் அறிமுகப்படுத்தியது . தற்பொழுது, ரெட்மி 9 ஏ மற்றும் ரெட்மி 9 சி ஆகிய இரண்டு புதிய மாடல் மலேசியாவில் ஜூன் 30 ஆம் தேதி வெளியிடப்படும் என்று சியோமி அறிவித்துள்ளது.

ரெட்மி 9 ஏ மற்றும் ரெட்மி 9 சி

ரெட்மி 9 ஏ மற்றும் ரெட்மி 9 சி

சியோமி நிறுவனம் மலேசியாவின் பேஸ்புக் பதிவில், ரெட்மி 9 ஏ மற்றும் ரெட்மி 9 சி ஆகிய ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரெட்மி 9 ஏ மற்றும் ரெட்மி 9 சி ஆகிய இரண்டு மாடல் ஸ்மார்ட்போன் மாடல்களும் பெரிய பேட்டரி மற்றும் பெரிய டிஸ்ப்ளேவுடன் வரும் என்று அதிகாரப்பூர்வ போஸ்டரையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஸ்பெஷல் ரெட்மி 9 சி ஸ்மார்ட்போன்

ஸ்பெஷல் ரெட்மி 9 சி ஸ்மார்ட்போன்

நமக்குக் கிடைத்துள்ள தகவலின்படி, ரெட்மி 9 சி இரண்டு விருப்பங்களில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 சி ஸ்மார்ட்போனின் ஒரு மாடல் என்எப்சி ஆதரவுடனும், மற்றொரு மாடல் என்எப்சி இல்லாத மாடலாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 சி என்எப்சி பதிப்பில் 13 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் இரட்டை கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

கிம் ஜாங்-உன் இன் சட்டவிரோத வாழ்க்கை அம்பலம்! அடிமைகளின் கோட்டையாக இருக்கும் 'ஆபீஸ் 39'.!கிம் ஜாங்-உன் இன் சட்டவிரோத வாழ்க்கை அம்பலம்! அடிமைகளின் கோட்டையாக இருக்கும் 'ஆபீஸ் 39'.!

ரெட்மி 9 சி என்எப்சி இல்லாத மாடல்

ரெட்மி 9 சி என்எப்சி இல்லாத மாடல்

அதேபோல், ரெட்மி 9 சி என்எப்சி இல்லாத மாடல் ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பு இருக்கும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களிலும் 5 மெகாபிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா வாட்டர் டிராப்-நாட்ச் டிஸ்பிளேயுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

5,000 எம்ஏஎச் பேட்டரி

5,000 எம்ஏஎச் பேட்டரி

ரெட்மி 9 சி ஸ்மார்ட்போன், 6.53' இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்ட 1600 x 720 பிக்சல்கள் டிஸ்பிளேயுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் மாலி ஜி31 ஜி.பீ.யுடன் மீடியா டெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் வழியாக 512 ஜிபி வரை விரிவாக்க ஸ்டோரேஜ் நன்மையுடன், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.

BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: 3ஜி திட்டங்களில் 4ஜி சேவை!BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: 3ஜி திட்டங்களில் 4ஜி சேவை!

ரெட்மி 9 ஏ ஸ்மார்ட்போன்

ரெட்மி 9 ஏ ஸ்மார்ட்போன்

அதேபோல், ரெட்மி 9 ஏ ஸ்மார்ட்போன், 6.53' இன்ச் எச்டி பிளஸ் ஐ.பி.எஸ் கொண்ட 1600 x 720 பிக்சல்கள் கூடிய டிஸ்பிளேயுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் மாலி-ஜி 31 ஜி.பீ.யுடன் கூடிய மீடியா டெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது.

MIUI 11 / ஆண்ட்ராய்டு 10

MIUI 11 / ஆண்ட்ராய்டு 10

ஸ்டோரேஜ் விருப்பங்கள் மற்றும் மற்ற அனைத்து அம்சங்களும் ரெட்மி 9 சி ஸ்மார்ட்போன் போன்றதே. இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் MIUI 11 அடிப்படையாகக் கொண்ட ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் இயங்குகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 9A and Redmi 9C To Be Launched One With NFC And One Without NFC : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X