Redmi டைம்: கேமராவே 108 எம்.பினா அப்போ?- எங்கள் வேகத்திற்கு நீங்கள் தயாரா?
சியோமி நிறுவனமும் தனது சியோமி மி 10 மற்றும் சியோமி மி 10ப்ரோ ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கு 108எம்பி கேமராவு ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

அட்டகாசமான டிஸ்பிளே வசதி
சியோமி மி 10 மற்றும் மி 10ப்ரோ ஸ்மார்ட்போன்கள் 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED எச்டிஆர் பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 19:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதம், 1,200 nits பிரைட்நஸ், 5,00,000: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ, டிசி டிம்மிங், டிசிஐ-பி 3 கலர் வரம்பு ஆதரவு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது

2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர்
இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் எதிர்பார்த்த சிப்செட் வசதி இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 650ஜிபியு வசதியையும் கொண்டுள்ளது. மேலும் இந்த இரண்டு சாதனங்களுக்கும் ஆண்ட்ராய்டு 10 வசதி வழங்கப்பட்டுள்ளது,எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சியோமி மி 10 கேமரா அம்சங்கள்
சியோமி மி 10 ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி மெயின் கேமரா + 13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி சென்சார் + 2எம்பி சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சியோமி மி 10ப்ரோ கேமரா அம்சங்கள்
சியோமி மி 10ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி மெயின் கேமரா + 20எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 12எம்பி கேமரா+ 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரியில் சிறிய மாற்றம்
இரண்டு ஸ்மார்ட்போன்களின் பேட்டரிகளில் சிறிய மாற்றம் உள்ளது என்றுதான் கூறவேண்டும், அதன்படி சியோமி மி10 ஸ்மார்ட்போனில் 4780எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. பின்பு மி 10ப்ரோ ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 50வாட் வயர் பாஸ்ட் சார்ஜிங், 30வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்
இணைப்பு ஆதரவுகள் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி உள்ளது, மேலும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.1111 ax (2.4GHz + 5GHz) 8 x / MU-MIMO, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் (எல் 1 + எல் 5), என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சியோமி மி 10 விலை
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10 விலை 3999யுவான்(இந்திய மதிப்பில் ரூ.40,920) 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10 விலை 4299யுவான்(இந்திய மதிப்பில் ரூ.43,990) 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10 விலை 4699யுவான்(இந்திய மதிப்பில் ரூ.48,080)

சியோமி மி 10ப்ரோ விலை
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10ப்ரோ விலை 4999யுவான்(இந்திய மதிப்பில் ரூ.51,150) 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10ப்ரோ விலை 5499யுவான்(இந்திய மதிப்பில் ரூ.56,270) 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10ப்ரோ விலை 5999யுவான்(இந்திய மதிப்பில் ரூ.61,370)

பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகும் திட்டம்
சியோமி நிறுவனத்தின் இந்த போன், பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ரெட்மி நிறுவனத்தின் இந்தியா டுவிட்டர் டீசர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நடிப்பில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் குளோபல் விபி., மனு குமார் ஜெயின் மற்றும் சியோமியின் இந்தியா நிர்வாகத்திடம் ரெட்மி நோட் 9 குறித்து டுவிட்டரில் கேள்வி கேட்டார்.

ரெட்மி நோட் 9 சீரிஸ்
அடுத்த சில நிமிடங்களிலேயே குளோபல் விபி மனு ஒரு சில தொலைபேசிகளை சுற்றியுள்ள புகைப்படத்துடன் மீண்டும் டுவீட் செய்தார். அந்த படத்தில் ரெட்மி நோட் 9 இருப்பதை சுட்டிக் காட்டி இருந்தார். அதோடு ரெட்மி டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் 1 முதல் 8 வரை எண்ணிவிட்டு 9-க்கு தயாரா என ரெட்மி 9 அறிமுகம் குறித்து தெரிவிக்கிறார்.

டுவிட்டில் வெளியான தகவல்
தொழில்துறை ஆதாரங்களை மேற்கோள்காட்டி 91 மொபைல்களின் சமீபத்திய அறிக்கையின்படி, சியோமி இந்தியாவில் ரெட்மி 9 சீரிஸ் போனை மார்ச் 15-க்குள் அறிமுகப்படுத்துவதற்கான பணியில் ஈடுபட்டு வருவதற்காக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications