சியோமி ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!
சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு பட்ஜெட் விலையில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது, தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 10அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை வைத்திருக்கும்
அனைத்து பயனர்களுக்கும் ஆண்ட்ராய்டு 10அப்டேட் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல்திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 439சிப்செட்
ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்புஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

2ஜிபி/3ஜிபி ரேம்
இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்குஅதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

12எம்பி கேமரா
ரெட்மி 8ஏ சாதனத்தின் பின்புறம் 12எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது,பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கைநுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி
ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 18வாட் சார்ஜர் ஆதரவு, வைஃபை,ஜிபிஎஸ்,3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்டரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,499-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








