சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளியானது.!

|

சியோமி நிறுவனம் தனது ரெட்மி 7 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ரெட்மி 7 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது சியோமி நிறுவனம். மேலும்
இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளியானது.!

குறிப்பாக ரெட்மி 7 ஸ்மார்ட்போன் மாடல் மலிவு விலையில் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. பின்பு வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.26-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:

சிப்செட்:

இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ கொண்டு ரெட்மி 7 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் பொதுவாக 12எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு:

சேமிப்பு:

ரெட்மி 7 ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

இந்த ஸ்மார்ட்போனில் 3900எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி வோல்ட்இ, வைஃபை, யுஸ்பி, என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பின்பு ரூ.8,000 என்ற ஆரம்ப விலையில் ரெட்மி 7 ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 7 hands-on video leaked, specs revealed: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X