டூயல் ரியர் கேமரவுடன் மலிவு விலையில் ரெட்மீ 6 அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
சியோமி நிறுவனம் தற்சமயம் மலிவு விலையில் ரெட்மீ 6 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கத. குறிப்பாக பேஸ் அன்லாக் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. விரைவில் ரெட்மீ 6 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி ரெட்மீ 6 :
சியோமி ரெட்மீ 6 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.45-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல்
தீர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
சியோமி ரெட்மீ 6 ஸ்மார்ட்போனில் மீடியா டெக் ஹெலியோ பி22 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ரெட்மீ 6 ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய
செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி , என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விலை:
சியோமி ரெட்மீ 6 ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.8,400-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications