பிலிகார்ட் & மி ஸ்டோரில் சியோமி ரெட்மி 6 விற்பனை.! சலுகையுடன்.!
சியோமி நிறுவனம் தனது அடுத்த புதியநிலை சியோமி ரெட்மி 6, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் விற்பனையை துவங்குகிறது.
சியோமி நிறுவனம் தனது அடுத்த புதியநிலை சியோமி ரெட்மி 6, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் விற்பனையை துவங்குகிறது.
இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் மற்றும் சியோமி இன் இ-காமர்ஸ் வலைத்தளமான mi.com ஆகியவற்றில் பிரத்தியேகமாக கிடைக்கும்.

விற்பனை
தன்னுடைய அனைத்து தயாரிப்புகளையும் சியோமி நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து தனது விற்பனைகளைச் சிறப்பாக செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாய் இன்றும் சியோமி நிறுவனம் தனது விற்பனையை பிளிப்கார்ட் மூலம் அறிவித்திருக்கிறது.

வெற்றியை தொடர்ந்து
சியோமி ரெட்மி 6ஏ மற்றும் சியோமி ரெட்மி 6 ப்ரோ இரண்டு மாடல் ஸ்மார்ட் போன்களும் ஒன்றாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட் போனின்
வெற்றியை தொடர்ந்து சியோமி ரெட்மி 6 வெளியிடப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி ரெட்மி 6 சிறப்பம்சங்கள்:
- 5.45 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் கூடிய 720 x 1440 பிக்சல் ரெசொலூஷன் 18:9 விகித தோடு திரை.
- மீடியா டெக் MT6762 ஹெலியோ P22 ஆக்டா கோர் சிப்செட் மற்றும் 2.0ஜிகா ஹெர்ட்ஸ் உடன் கூடிய பவர் விஆர் GE8320 ஜிபியு
- 3 ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி / 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வெறியன்ட்
- 12 மெகா பிக்சல் பின் கேமரா உடன் கூடிய 5 மெகா பிக்சல் டூயல் கேமரா
- 5 மெகா பிக்சல் முன் செல்பி கேமரா
- எஹ்டி வீடியோ ரெகார்டிங்
- ஏஐ பேஸ் அன்லாக்
- ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்துடன் கூடிய MIUI 9.6 இயங்குதளம்
- 4G VoLTE
- வை-ஃபய்
- ப்ளூடூத்
- மைக்ரோ USB போர்ட்
- ஜிபிஎஸ்
- 3.5 mm ஹெட் போன் ஜாக்
-3000 எம்ஏஎச் பேட்டரி

விலை
பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்துள்ள சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போன் தற்பொழுது வெறும் ரூ.7,999 க்கு 11% சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications