விரைவில்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு வருகிறது புத்தம் புதிய வசதி.!
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்படும் என்றும், பின்பு போகோ எப்1 போன்ற உயர்ரக ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு q அப்டேட்
வழங்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிறுவனம் விரைவில் புதிய விவோ ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதைப் பார்ப்போம்.
ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.45-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1440 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகள் 710எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டு வருவதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ரெட்மி 7ஏ சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரமைரி கேமரா + 5எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இடம்பெறும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 4020எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications