இந்தியா: சியோமி ரெட்மி 6 ப்ரோ மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

ரெட்மீ 6 ப்ரோவில் உள்ள கேமராக்களை பொறுத்தமட்டில், 5எம்பி டெப்த் சென்சருடன் இணைந்த ஒரு 12 எம்பி முதன்மை சென்சார் என்கிற டூயல் கேமரா அமைப்பு உள்ளது.

|

நேற்று சியோமி ரெட்மி வ்யை2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று சியோமி ரெட்மி 6ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இது போன்று விரைவில் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3ஜிபி ரேம் கொண்ட சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.11,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 4ஜிபி ரேம் கொண்ட சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

பிளாக், ப்ளூ, ரெட், கோல்ட் மற்றும் ரோஸ் கோல்ட்.!

பிளாக், ப்ளூ, ரெட், கோல்ட் மற்றும் ரோஸ் கோல்ட்.!

அளவீட்டில் 149.33 x 71.68 x 8.75 மிமீ மற்றும் 178 கிராம் எடையுள்ள இந்த ஸ்மார்ட்போன் உலோக உடல் மற்றும் 4000mAh பேட்டரியை
கொண்டுள்ளது. ஒரு 5.84 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது. அதாவது 19: 9 என்கிற அளவிலான திரை விகிதம் மற்றும் 2280 x 1080
பிக்சல்கள் தீர்மானத்தை கொண்டது. பிளாக், ப்ளூ, ரெட், கோல்ட் மற்றும் ரோஸ் கோல்ட் போன்ற பல வண்ண விருப்பங்களின் கீழ் வெளியாகியுள்ளது.

3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி உள் சேமிப்பு.!

3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி உள் சேமிப்பு.!

சியோமி நிறுவனம், ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி மீதான தன காதலை, இந்த ஸ்மார்ட்போனிலும் தொடர்கிறது. இந்த சிப்செட் ஆனது 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி உள் சேமிப்புடன் இணைந்து செயல்படுகிறது. உடன் 256 ஜிபி வரையிலான சேமிப்பு விரிவாக்கத்திற்காக ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் ஒன்றையும் கொண்டு உள்ளது. பொதுவாக சியோமி நிறுவனம், மூன்று கார்ட் ஸ்லாட் கொண்ட ஸ்மார்ட்போன்களை சீனாவில் வெளியிட்டது இல்லை, ஆனால் அது ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

 டூயல் கேமரா அமைப்பு.!

டூயல் கேமரா அமைப்பு.!

இதன் 4000mAh பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவை கொண்டிருக்கவில்லை. இருந்தாலும் கூட இதன் ஒரு முழுமையான சார்ஜ் ஆனது ஒரு நாளுக்கு மேல் நீடிக்கும் என்பது உறுதி. ரெட்மீ 6 ப்ரோவில் உள்ள கேமராக்களை பொறுத்தமட்டில், 5எம்பி டெப்த் சென்சருடன் இணைந்த ஒரு 12 எம்பி முதன்மை சென்சார் என்கிற டூயல் கேமரா அமைப்பு உள்ளது. இந்த கேமரா ஏஐ பியூட்டி, EIS மற்றும் பல அம்சங்களை கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, ஒரு 5எம்பி செல்பீ கேமரா உள்ளது.

 ஏமாற்றமாக எடுத்துக்கொள்ள முடிகிறது.!?

ஏமாற்றமாக எடுத்துக்கொள்ள முடிகிறது.!?

இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் ஒன்று அதன் பின் பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. உடன் ஏஐ அடிப்படையிலான பேஸ் அன்லாக் செயல்பாட்டையும் வழங்குகிறது. ரெட்மி 6 ப்ரோ இன்னும், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான MIUI 9.5 கொண்டு இயங்கும் என்பதில் ஏமாற்றம், இது நிறுவனத்தின் சமீபத்திய MIUI 10 கொண்டு வெளியாகும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டதால் தான் இதை ஏமாற்றமாக எடுத்துக்கொள்ள முடிகிறது. மற்றபடி MIUI 9.5-ல் எந்த குறையும் இல்லை.

 4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட்.!

4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட்.!

ரெட்மி 6 மற்றும் 6ஏ ஸ்மார்ட்போன்களில் ருந்து ஐஆர் பிளாஸ்டர் நீக்கப்பட்டது. ஆனால் இது மீண்டும் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் சேர்க்கப்பட்டுள்ளது. ரெட்மி 6 ப்ரோவில் உள்ள மற்ற இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை 4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத்,
ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. இதில் இருப்பது யூஎஸ்பி டைப்-சி அல்ல என்பது
குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 6 Pro Price in India Cut, Now Starts at Rs 9,999: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X