சியோமி ரெட்மீ 6 ப்ரோ, மி மேக்ஸ் 3 அம்சங்கள் வெளியீடு.!

சியோமி மி மேக்ஸ் 3 சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்இடம்பெற்றுள்ளது.

|

சியோமி நிறுவனம் தொடர்ந்து பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி விரைவில் ரெட்மீ 6 ப்ரோ மற்றும் மி மேக்ஸ் 3 என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் பட்ஜெட் விலையில் வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

சியோமி ரெட்மீ 6 ப்ரோ, மி மேக்ஸ் 3 அம்சங்கள் வெளியீடு.!

இப்போது இணையத்தில் சியோமி ரெட்மீ 6 ப்ரோ, மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள். குறிப்பாக ரெட்மீ 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மீ 6 ப்ரோ:

சியோமி ரெட்மீ 6 ப்ரோ:

சியோமி ரெட்மீ 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.84-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சேமிப்பு:

சேமிப்பு:

ரெட்மீ 6 ப்ரோ ஸ்மார்ட்போன் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2/3/4ஜிபி ரேம்
மற்றும் 16/32/64 ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

ரெட்மீ 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 12+ 5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 4000எம்ஏஎச் பேட்டரி அமைப்பு மற்றும்
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் போன்ற பல்வேறு அமசங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சியோமி மி மேக்ஸ் 3:

சியோமி மி மேக்ஸ் 3:

சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.99-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல்
திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 20எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக்
கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

சியோமி மி மேக்ஸ் 3 செயலி:

சியோமி மி மேக்ஸ் 3 செயலி:

சியோமி மி மேக்ஸ் 3 சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்
இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 6 Pro Mi Max 3 and Mi Pad 4 specs leaked online

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X