அறிமுகம்: பட்ஜெட் விலையில் ரெட்மீ 6 ப்ரோ (விலை மற்றும் அம்சங்கள்).!
சியோமி நிறுவனம் அதன் ரெட்மீ 6 ப்ரோ ஸ்மார்ட்போனை இன்று அறிவித்துள்ளது
சியோமி நிறுவனம் அதன் ரெட்மீ 6 ப்ரோ ஸ்மார்ட்போனை இன்று அறிவித்துள்ளது. மிகவும் எதிர்பார்த்தபடி, இதுவொரு நல்ல மற்றும் பழைய ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி கொண்டு இயங்கும் மற்றொரு சியோமிஸ்மார்ட்போனாகவும் மற்றும் ஒரு உச்சநிலை டிஸ்பிளே கொண்டு வெளியாகும் முதல் ரெட்மீ ஸ்மார்ட்போனாகவும் திகழ்கிறது.
ரெட்மீ 6 ப்ரோ என்பது ரெட்மீ எஸ்2 (இந்தியாவில் ரெட்மீ Y2) ஸ்மார்ட்போனின் அப்கிரேட்டட் மாடல் ஆகும். அதாவது உலோக வடிவமைப்பு, பெரிய பேட்டரி ஆயுள் மற்றும் ஒரு சிறப்பான டிஸ்பிளே ஆகியவற்றை கொண்டிருக்கும். இதன் முழு அம்சங்கள் என்ன.? விலை நிர்ணயம் என்ன.? இந்தியாவில் எப்போது வெளியாகும்.? என்பதை பற்றி விரிவாக காணலாம்.

இந்திய சந்தையை நிச்சயமாக தவிர்க்க முடியாது. ஏனெனில்.?
ரெட்மீ 6 ப்ரோ ஆனது, சீனாவில் ரெட்மீ எஸ்2-வை போலவே உள்ளது. இதன் இந்திய வெளியீடு எப்போது நடக்கும் என்பது பற்றிய வார்த்தைகள் இல்லை. இருந்தாலும் கூட, இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையை நிச்சயமாக தவிர்க்க முடியாது. ஏனெனில் சியோமி நிறுவனம் சமீபத்தில் தான், ரூ.9,999/- என்கிற விலையில் இந்தியாவில் ரெட்மீ எஸ்2 மற்றும் ரெட்மீ Y2 ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆக அதனை தொடர்ந்து ரெட்மீ 6 ப்ரோ ஸ்மார்ட்போனும் களமிறங்கிய தீர வேண்டும்.

பிளாக், ப்ளூ, ரெட், கோல்ட் மற்றும் ரோஸ் கோல்ட்.!
அளவீட்டில் 149.33 x 71.68 x 8.75 மிமீ மற்றும் 178 கிராம் எடையுள்ள இந்த ஸ்மார்ட்போன் உலோக உடல் மற்றும் 4000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஒரு 5.84 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது. அதாவது 19: 9 என்கிற அளவிலான திரை விகிதம் மற்றும் 2280 x 1080 பிக்சல்கள் தீர்மானத்தை கொண்டது. பிளாக், ப்ளூ, ரெட், கோல்ட் மற்றும் ரோஸ் கோல்ட் போன்ற பல வண்ண விருப்பங்களின் கீழ் வெளியாகியுள்ளது

3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி உள் சேமிப்பு.!
சியோமி நிறுவனம், ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி மீதான தன காதலை, இந்த ஸ்மார்ட்போனிலும் தொடர்கிறது. இந்த சிப்செட் ஆனது 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி உள் சேமிப்புடன் இணைந்து செயல்படுகிறது. உடன் 256 ஜிபி வரையிலான சேமிப்பு விரிவாக்கத்திற்காக ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் ஒன்றையும் கொண்டு உள்ளது. பொதுவாக சியோமி நிறுவனம், மூன்று கார்ட் ஸ்லாட் கொண்ட ஸ்மார்ட்போன்களை சீனாவில் வெளியிட்டது இல்லை, ஆனால் அது ரெட்மீ 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

டூயல் கேமரா அமைப்பு.!
இதன் 4000mAh பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவை கொண்டிருக்கவில்லை. இருந்தாலும் கூட இதன் ஒரு முழுமையான சார்ஜ் ஆனது ஒரு நாளுக்கு மேல் நீடிக்கும் என்பது உறுதி. ரெட்மீ 6 ப்ரோவில் உள்ள கேமராக்களை பொறுத்தமட்டில், 5எம்பி டெப்த் சென்சருடன் இணைந்த ஒரு 12 எம்பி முதன்மை சென்சார் என்கிற டூயல் கேமரா அமைப்பு உள்ளது. இந்த கேமரா ஏஐ பியூட்டி, EIS மற்றும் பல அம்சங்களை கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, ஒரு 5எம்பி செல்பீ கேமரா உள்ளது

ஏமாற்றமாக எடுத்துக்கொள்ள முடிகிறது.!?
இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் ஒன்று அதன் பின் பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. உடன் ஏஐ அடிப்படையிலான பேஸ் அன்லாக் செயல்பாட்டையும் வழங்குகிறது. ரெட்மீ 6 ப்ரோ இன்னும், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான MIUI 9.5 கொண்டு இயங்கும் என்பதில் ஏமாற்றம், இது நிறுவனத்தின் சமீபத்திய MIUI 10 கொண்டு வெளியாகும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டதால் தான் இதை ஏமாற்றமாக எடுத்துக்கொள்ள முடிகிறது. மற்றபடி MIUI 9.5-ல் எந்த குறையும் இல்லை.

4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட்.!
ரெட்மீ 6 மற்றும் 6ஏ ஸ்மார்ட்போன்களில் ருந்து ஐஆர் பிளாஸ்டர் நீக்கப்பட்டது. ஆனால் இது மீண்டும் ரெட்மீ 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் சேர்க்கப்பட்டுள்ளது. ரெட்மீ 6 ப்ரோவில் உள்ள மற்ற இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை 4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. இதில் இருப்பது யூஎஸ்பி டைப்-சி அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி ரெட்மீ 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை.!
சீனாவில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அளவிலான சேமிப்பு மாடல் ஆனது (ரெட்மீ 6 ப்ரோவின் அடிப்படை மாறுபாடு) 999 யுவான்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது (இந்திய மதிப்பில் சுமார் சுமார் ரூ.10,486/- ஆகும்). மறுகையில் உள்ள 4 ஜிபி / 32 ஜிபி ஆனது தோராயமாக ரூ.12,586/-க்கும் மற்றும் இறுதியாக, 64 ஜிபி உள் சேமிப்புடன் கூடிய 4 ஜிபி ரேம் மாடல் ஆனது சுமார் ரூ.13,636/-க்கும் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








