பட்ஜெட் ஸ்மார்ட்போனான ரெட்மீ வரிசையில் ஆப்பிளுக்கு ஆப்பு; சபாஷ் சியோமி.!

ஆப்பிளுக்கு போட்டியாக களமிறங்க போவது - ரெட்மீ வரிசையின் கேள் வெளியாகும் ஒரு ஸ்மார்ட்போன் தான். அது என்ன ஸ்மார்ட்போன்.? அதன் பெயர் என்ன.?

|

சூப்பர் பட்ஜெட், பட்ஜெட், மிட்-ரேன்ஜ் மற்றும் ஹை-எண்ட் என அனைத்து வகையான விலை பிரிவுகளின் கீழும் ஸ்மார்ட்போன்களை களமிறக்கி, பல இந்திய மற்றும் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை காலி செய்த சியோமி நிறுவனம், அடுத்ததாக பெரு நிறுவனங்களை குறிவைத்துள்ளதாக தெரிகிறது. அது வேறெந்த நிறுவனமும் இல்லை - ஆப்பிள் தான்.!

ஆப்பிளுடன் போட்டியிடுகிறது என்ற உடனேயே நிறுவனத்தின் ஹை-எண்ட் வரிசை ஸ்மார்ட்போன்களில் ஏதாவது ஒன்றின், அடுத்த அப்டேட் பற்றி யோசிக்க ஆரம்பித்து விட வேண்டாம். ஆப்பிளுக்கு போட்டியாக களமிறங்க போவது - ரெட்மீ வரிசையின் கேள் வெளியாகும் ஒரு ஸ்மார்ட்போன் தான். அது என்ன ஸ்மார்ட்போன்.? அதன் பெயர் என்ன.? அதன் அம்சங்கள் என்ன.? என்பதை பற்றி விரிவாக காண்போம்.!

ஒரு 'பிளஸ்' அல்லது 'ப்ரோ' மாதிரியாக வெளியாகலாம்.!

ஒரு 'பிளஸ்' அல்லது 'ப்ரோ' மாதிரியாக வெளியாகலாம்.!

ரெட்மீ 5 வரிசை வெளியான அடுத்த மூன்று மாதத்திலேயே ரெட்மீ 6 ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் வெளியாக தொடங்கின. அது ரெட்மீ 6 அல்லது ரெட்மீ 6ஏ என்கிற பெயரின் கீழ், சீன சான்றிதழ் தளத்தில் காணப்பட்டாலும் கூட, அது ஒரு 'பிளஸ்' அல்லது 'ப்ரோ' மாதிரியாக வெளியாகலாம் என்றும் ஊகிக்கப்பட்டது. அந்த ஊகம் தற்போது உறுதியாகியுள்ளது.

ஐபோன் எக்ஸ் போன்ற நாட்ச் வடிவமைப்பை வெளிப்படுத்தியுள்ளது.!

ஐபோன் எக்ஸ் போன்ற நாட்ச் வடிவமைப்பை வெளிப்படுத்தியுள்ளது.!

ஆம், ரெட்மீ வரிசையின் கீழ் வெளியாகும் அடுத்த ஸ்மார்ட்போனின் பெயர் - ரெட்மீ 6 ப்ளஸ் ஆகும். கூறப்படும் ஸ்மார்ட்போன் ஆனது, அதன் சமீபத்திய லீக்ஸ் புகைப்படத்தில் ஒரு ஐபோன் எக்ஸ் போன்ற நாட்ச் வடிவமைப்பை வெளிப்படுத்தியுள்ளது என்பது கூடுதல் சுவாரசியம். எம்1805டி1எஸ்இ என்கிற மாடல் எண்ணின் கீழ் காணப்பட்டுள்ள சியோமி 6 ப்ளஸ் ஆனது ரெட்மீ 6 ப்ரோ என்கிற பெயரிலும் வெளியாக வாய்ப்புள்ளது. இது ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ 5 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை விட சற்று பெரிய மாடலாக இருக்குமென்று தோன்றுகிறது.

5.84 இன்ச் முழு HD+ டிஸ்பிளே.!

5.84 இன்ச் முழு HD+ டிஸ்பிளே.!

இந்த புதிய ரெட்மீ ஸ்மார்ட்போனில் செங்குத்தாக அமைக்கப்பெற்ற இரட்டை பின்புற கேமராக்கள் உள்ளன, அதாவது மி8 ஸ்மார்ட்போனின் அடிச்சுவடுகளை தொடர்கிறது என்றுகூட கூறலாம். வெளியான TENAA பட்டியலின் படி, இந்த ஸ்மார்ட்போன் 19: 9 என்கிற அளவிலான திரை விகிதமும் கொண்ட 5.84 இன்ச் முழு HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் 2GHz உடனான ஒரு Octa-core செயலி மூலம் இயக்கப்படுகிறது, ஆனால் சரியான SoC பற்றிய தகவல் வெளிப்படுத்தப்படவில்லை. அது Qualcomm Snapdragon 660 ஆக அல்லது மீடியா டெக் ஹெலியோ P60 செயலியாக இருக்கலாம்.

2 ஜிபி / 3 ஜிபி / 4 ஜிபி ரேம்.!

2 ஜிபி / 3 ஜிபி / 4 ஜிபி ரேம்.!

மேலும் வெளியான பட்டியலின்படி, ரெட்மீ 6 பிளஸ் அல்லது ரெட்மீ 6 ப்ரோ ஆனது 2 ஜிபி / 3 ஜிபி / 4 ஜிபி ரேம் உடனான 16 ஜிபி / 32 ஜிபி / 64 ஜிபி மடல்களில் வெளியாகும். கேமராவை பொறுத்தவரை, பின்பக்கத்தில் பிரதான சென்சார் 12 மெகாபிக்சல் ஆக இருக்கும். முன்பக்கத்தை பொறுத்தவரை 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறும். ஆண்ட்ராய்டு ஓரியோ கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றிய வார்த்தைகள் ஏதுமில்லை.

How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil
4000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம்.!

4000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம்.!

வரவிருக்கும் இந்த சியோமி ஸ்மார்ட்போன் ஆனது, ஒரு 4000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம். பரிமாணங்களை பொறுத்தவரை 149.33x71.68x8.75 மிமீ மற்றும் எடை 178 கிராம் இருக்கும் என பட்டியலிடப்பட்டுள்ளது. வழக்கம் போல ஒரு நியாமான விலை மற்றும் பிளாக், ரோஸ் கோல்ட், சாம்பெயின் கோல்ட், வைட், ப்ளூ, ரெட் மற்றும் பின்க், ஆஷ் மற்றும் சில்வர் போன்ற பல வண்ண மாதிரிகளில் வெளியாகும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 6 Plus With iPhone X-Like Display Notch Spotted on TENAA. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X