இந்தியா: மிகவும் எதிர்பார்த்த சியோமி ரெட்மி 6 விற்பனைக்கு வருகிறது.!

சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 செயலி இடம்பெற்றுள்ளது.

|

சியோமி நிறுவனத்தின் அசத்தலான ரெட்மி 6 ஸ்மார்ட்போன் மாடல் இன்று விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இன்று மதியம் 12மணி அளவில் பிளிப்கார்ட் Mi.com. வலைதளங்களில் விற்பனைக்கு வரும் என்று சியோமி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் மாடல் வரும் செப்டம்பர் 19-ம் தேதி விற்பனைக்கு வரும்.

தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ரெட்மி 6 ஸ்மார்ட்போனை வாங்கினார் ரூ.500 வரை தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.

சியோமி ரெட்மி 6:

சியோமி ரெட்மி 6:

சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720x1440 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மீடியாடெக்:

மீடியாடெக்:

சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு
ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு கருப்பு, தங்கம், ரோஸ் கோல்டு, நீலம் போன்ற நிறங்களில் ரெட்மி 6 ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

கேமரா:

கேமரா:

ரெட்மி 6 ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, குறிப்பாக 5எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கேம் போன்ற அம்சங்களுக்கு மிக அருமையாக இருக்கும் ரெட்மி 6 ஸ்மார்ட்போன்.

விலை:

விலை:

சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 32ஜிபி மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது, அதேபோல் 64ஜிபி மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,499-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 6 to Go on Sale for the First Time in India Today via Flipkart and Micom: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X