செப்டம்பர் : 5.45-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி ரெட்மீ 6.!

சியோமி ரெட்மீ 6 ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

|

ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாதம் துவகத்தில் தனது ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்யும் என்று தெரிவித்து இருந்தது, ஆனால் சியோமி நிறுவனம் அதற்குபோட்டியா இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் வரும் செப்டம்பர் மாதம் துவகத்தில் சியோமி ரெட்மீ 6 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம்.

மேலும் சியோமி ரெட்மீ 6 ஸ்மார்ட்போன் சார்ந்த சில முக்கிய அம்சங்களை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். சமீபத்தில் போகோ எப்1 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்போன் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். இப்போது சியோமி ரெட்மீ 6 ஸ்மார்ட்போனின் சில அம்சங்களைப் பார்ப்போம்.

சியோமி ரெட்மீ 6

சியோமி ரெட்மீ 6

சியோமி ரெட்மீ 6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

மெமரி:

மெமரி:

இக்கருவி 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 845:

ஸ்னாப்டிராகன் 845:

சியோமி ரெட்மீ 6 ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் அடக்கம் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கேமரா:

கேமரா:

சியோமி ரெட்மீ 6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 5எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என அந்நிறவனம் சார்பில் தெரிவிக்க்பபட்டுள்ளது.

 பேட்டரி:

பேட்டரி:

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. 3.1 போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 3000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் சியோமி ரெட்மீ 6 ஸ்மார்ட்போன் விலை சார்ந்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 6 could be coming to India in early September: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X