ரூ.6,000/- என்ற சூப்பர் பட்ஜெட் விலை; அட்டகாசமான அம்சங்கள்; அதிரடி காட்டும் ரெட்மீ 5ஏ.!

Written By:

சியோமி நிறுவனம், ரெட்மீ 5ஏ என்ற மேலுமொரு நுழைவு நிலை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரெட்மீ 5ஏ ஆனது சியோமி ரெட்மீ 4ஏ ஸ்மார்ட்போனின் வெற்றியை தொடர்ந்து வெளியாகவும் அடுத்தகட்ட மாறுபாடாகும்.

ரூ.6,000/-க்கு அட்டகாசமான அம்சங்கள்; அதிரடி காட்டும் ரெட்மீ 5ஏ.!

அறிமுகமாகியுள்ள ரெட்மீ 5ஏ ஆனது உலோக உடல் வடிவமைப்பை கொண்டுள்ளது. இருப்பினும் இது "உலோகத்தை விட அதிக இலகுவானது" என்று சியோமி குறிப்பிட்டுள்ளது, அதாவது 137 கிராம் எடை கொண்டு அதன் லைட்வெயிட் பிரிவை சிறப்பித்துக் காட்டுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வசதியான பிடிமானத்திற்கான வட்டமான மூலைகள்.!

வசதியான பிடிமானத்திற்கான வட்டமான மூலைகள்.!

வெளியாகியுள்ள அனைத்து புதிய ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போன் ஆனது வசதியான பிடிமானத்திற்கான வட்டமான மூலைகள் போன்ற சில வடிவமைப்பு மாற்றங்களை கொண்டு வருகிறது. முந்தைய ரெட்மீ ஸ்மார்ட்போன்கள் போலவே, புதிய ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போனும் ஒழுக்கமான பேட்டரி ஆயுளை வழங்குகிறது.

எட்டு நாள் நீண்ட பேட்டரி.!

எட்டு நாள் நீண்ட பேட்டரி.!

அதாவது ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போன் ஆணாதிக்க சுமார் எட்டு நாள் நீண்ட பேட்டரி ஆயுளை வழங்குமென்று நிறுவனம் கூறுகிறது. மேலும் இது மியூஐ 9 கொண்டு இயக்கப்படுகிறது. துரதிருஷ்டவசமாக, இந்த நுழைவு நிலை சாதனத்தில் கைரேகை ஸ்கேனர் இடம்பெறவில்லை.

5 இன்ச் எச்டி.!

5 இன்ச் எச்டி.!

அம்சங்களை பொறுத்தமட்டில், ரெட்மீ 4ஏ உடன் ஒப்பிடும்போது இந்த புதிய ரெட்மீ 5ஏ பெரிய அளவிலான மேம்பாடுகளை கொண்டிருக்கவில்லை. ரெட்மீ 5ஏ ஆனது 5 இன்ச் எச்டி (720x1280 பிக்சல்கள்) 296பிபிஐ அளவிலான பிக்சல் அடர்த்தி கொண்ட டிஸ்பிளே கொண்டுள்ளது.

ஸ்னாப்ட்ராகன் 425 எஸ்ஓசி, 2ஜிபி ரேம்.!

ஸ்னாப்ட்ராகன் 425 எஸ்ஓசி, 2ஜிபி ரேம்.!

மேலும் ரெட்மீ 4ஏ போன்றே க்வாட்கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 425 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 1.4ஜிகாஹெர்ட்ஸ் உடனான 2ஜிபி ரேம் உடன் இணைந்துள்ளது. ஒரே ஒரு சேமிப்பு மாதிரியில் மட்டுமே இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

3000எம்ஏஎச் பேட்டரி.!

3000எம்ஏஎச் பேட்டரி.!

எதிர்காலத்தில் அதிக மாறுபாடுகள் எதிர்பார்க்கக்கூடிய இந்த சாதனம் தற்போது மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடக்கிய சேமிப்புடன் வருகிறது. இரட்டை சிம் ஆதரவு கொண்ட இக்கருவி ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கிறது, இது ரெட்மீ 4ஏ உடன் ஒப்பிடும்போது குறைவாகும்.

13 மெகாபிக்சல் பின்புற கேமரா.!

13 மெகாபிக்சல் பின்புற கேமரா.!

கேமரா துறையை பொறுத்தமட்டில், எப் / 2.2 துளை, பர்ஸ்ட் ஷார்ட், பனோரமா முறை, எச்டிஆர் பயன்முறை மற்றும் பல அம்சங்கள் கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. மறுபக்கம் எப் / 2.0 துளை உடனான 5 மெகாபிக்சல் முனபக்க கேமராவுடன் வருகிறது.

இணைப்பு விருப்பங்கள்.!

இணைப்பு விருப்பங்கள்.!

இதன் கேமராக்கள் 1080 மற்றும் 720பி வீடியோ பதிவுகளை ஆதரிக்கிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில் வோல்ட், 3ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், ப்ளூடூத், வைஃபை மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி உடன் 4ஜி ஆதரவையும் வழங்குகிறது. இது கலப்பின சிம் ஸ்லாட் உடன் வருகிறது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

புதிய சியோமி ரெட்மீ 5ஏ ஆனது சுமார் ரூ.6,000/- என்ற இந்திய விலை நிர்ணயப்புள்ளியை பெறலாம். சீனாவில் இன்று (திங்கள்) முதல் முன்பதிவுகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ள இக்கருவியின் இந்திய வெளியீடு சார்ந்த வார்த்தைகள் தற்போது ஏதுமில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Xiaomi Redmi 5A With Snapdragon 425, MIUI 9 Launched: Price, Specifications. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot