5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சியோமி ரெட்மி 5ஏ.!
சியோமி ரெட்மி 5ஏ பொறுத்தவரை 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 435 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.2 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது.
சியோமி நிறுவனம் சியோமி ரெட்மி 5ஏ என்ற பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போனை பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் எம்சிஇ3பி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை, தங்கம், நீலம், தங்கம், வெள்ளி, சிவப்பு, சாம்பல் போன்ற நிறங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளன.

5-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 720பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் டூயல் சிம் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 7.1.2:
சியோமி ரெட்மி 5ஏ பொறுத்தவரை 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 435 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.2 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 2/3/ஜிபி ரேம் மற்றும் 16/32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

8எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

3000எம்ஏஎச்:
சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications