புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் சியோமி ரெட்மீ 5ஏ.!
இக்கருவி 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 720பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் டூயல் சிம் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
சியோமி நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் பிப்ரவரி 1-ம் தேதி ரோஸ் கோல்ட் நிறத்தில் சியோமி ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இதற்கு முன்பு தங்கம் மற்றும் டார்க் சாம்பல் நிறத்தில் சியோமி ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரோஸ் கோல்ட் நிறத்தில் வரும் சியோமி ரெட்மீ 5ஏ பிப்ரவரி 8-ம் தேதி விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு பிளிப்கார்ட் மற்றும் மி.காம் வலைதளம் மூலம் இந்த சியோமி ரெட்மீ 5ஏ விற்பனை செய்யப்படும்.

சியோமி ரெட்மீ 5ஏ:
சியோமி ரெட்மீ 5ஏ ஆனது 2 ஜிபி ரேம் / 16 ஜிபி சேமிப்பு என்கிற மாறுபாட்டில் அறிமுகமாகியுள்ளது. இதே சாதனம் 3 ஜிபி ரேம் / 32 ஜிபி சேமிப்பு மாறுபாட்டிலும், ரூ.6,999/- என்கிற விலை நிர்ணயத்தின் கீழ் கிடைக்கிறது.

5-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 720பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் டூயல் சிம் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்ட்ராகன் 425 எஸ்ஓசிஇ 2ஜிபி ரேம்:
மேலும் ரெட்மீ 4ஏ போன்றே க்வாட்கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 425 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 1.4ஜிகாஹெர்ட்ஸ் உடனான 2ஜிபி ரேம் உடன் இணைந்துள்ளது. ஒரே ஒரு சேமிப்பு மாதிரியில் மட்டுமே இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

13 மெகாபிக்சல் பின்புற கேமரா:
கேமரா துறையை பொறுத்தமட்டில், எப் / 2.2 துளை, பர்ஸ்ட் ஷார்ட், பனோரமா முறை, எச்டிஆர் பயன்முறை மற்றும் பல அம்சங்கள் கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. மறுபக்கம் எப் / 2.0 துளை உடனான 5 மெகாபிக்சல் முனபக்க கேமராவுடன் வருகிறது.

இணைப்பு விருப்பங்கள்:
இதன் கேமராக்கள் 1080 மற்றும் 720பி வீடியோ பதிவுகளை ஆதரிக்கிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில் வோல்ட்இ, 3ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், ப்ளூடூத், வைஃபை மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி உடன் 4ஜி ஆதரவையும் வழங்குகிறது. இது கலப்பின சிம் ஸ்லாட் உடன் வருகிறது.

3000எம்ஏஎச் :
சியோமி ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி அமைப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.


Click it and Unblock the Notifications