சியாமி ரெட்மீ 5, ரெட்மீ நோட் 5, ரெட்மீ 5ஏ: இதில் சிறந்தது எது?

|

ரூ.7,999 என்ற விலை நிர்ணயத்தோடு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சியாமி ரெட்மீ 5, இந்த மாதம் 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இந்நிலையில் அதே நிறுவனத்தைச் சேர்ந்த ரெட்மீ நோட் 5 மற்றும் ரெட்மீ நோட் 5 ப்ரோ ஆகியவை, நம் நாட்டில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும் விலைக் குறைந்த ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்வது சியாமி நிறுவனத்திற்கு புதிதல்ல. ஏனெனில் ஏற்கனவே ரெட்மீ 5ஏ மற்றும் ரெட்மீ நோட் 4 ஆகியவை சிறந்த விற்பனையை பெறும் மாடல்களின் வரிசையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சியாமி ரெட்மீ 5, ரெட்மீ நோட் 5, ரெட்மீ 5ஏ: இதில் சிறந்தது எது?

நீங்கள் ஒரு ரெட்மீ ரசிகராக இருந்து, ஒரு விலைக்குறைந்த ஸ்மார்ட்போனைத் தேடும் நபராக இருக்கும் பட்சத்தில், இதில் உள்ள ஏராளமான மாடல்களில் இருந்து எதை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் ஏற்படும். நாங்கள் விலைக்குறைந்த ஸ்மார்ட்போன்கள் என்று குறிப்பிட்டுள்ள நிலையில், மிகக் குறைந்த விலையான ரூ.5,999-க்கு கிடைக்கும் ஏதாவது ஒரு சியாமி ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்கலாம். விலைக் குறைந்த ஸ்மார்ட்போன்களின் சந்தைக்கான பிரிவில் வெவ்வேறு விலை பிரிவில் தனது சாதனங்களை களமிறக்கி வருவதால், அந்த பிரிவில் மற்ற தயாரிப்பாளர்களுக்கு கடும் நெருக்கடியை சியாமி நிறுவனம் ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிகிறது.

அடுத்தப்படியாக ஒரு சிறந்த ஸ்மார்ட்போனை நீங்கள் தேர்ந்தெடுக்கும் வகையில், சியாமி ரெட்மீ 5, ரெட்மீ நோட் 5 மற்றும் ரெட்மீ 5ஏ ஆகியவற்றை குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக ஒப்பிட்டு உள்ளோம்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ நோட் 5 ஆகியவை ஏறக்குறைய ஒத்த வடிவமைப்பை கொண்டவையாக உள்ளன. இவை இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் முழு திரை வடிவமப்பை கொண்டு, 18:9 என்ற விகிதாசாரத்தில் அமைந்து உள்ளது. இதனால் ஸ்மார்ட்போனுக்கு பெரிய அளவிலான திரையாக இல்லாமல், நீள்வாக்கில் அமைந்த தோற்றத்தை அளிக்கிறது.

இவ்விரு ஸ்மார்ட்போன்களிலும் பின்பக்க பேனலின் மேற்பகுதியின் நடுவில், ஒற்றை கேமராவை கொண்டு, இரண்டின் பின்பக்க பேனலும் ஒத்தாற் போல இருக்கின்றன. இந்த கேமராவிற்கு கீழே எல்இடி ஃபிளாஷ் யூனிட் மற்றும் ஒரு வட்ட வடிவ கைரேகை சென்ஸர் ஆகியவற்றை காண முடிகிறது.

ஆனால் ரெட்மீ 5ஏ-யின் வடிவமைப்பை பொறுத்த வரை முழு திரை வடிவமைப்பு இல்லாமல் வேறுபட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 16:9 என்ற விகிதத்தில் அமைந்த வழக்கமான திரையைப் பெற்றுள்ளது. பின்பக்க கேமராவின் அமைப்பு கூட வேறுபட்டு, மேலே இடதுபக்க முனையில் ஆன்டினா லைனுக்கு மேலே அமைந்துள்ளது. இதையொட்டி எல்இடி ஃபிளாஷ் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மூன்று ஸ்மார்ட்போன்களிலும் ஒரு கவர்ச்சிகரமான வடிவமைப்பு இல்லாவிட்டாலும், ரெட்மீ 5ஏ உடன் ஒப்பிட்டால், ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ நோட் 5 ஆகியவற்றில் உள்ள மெலிந்த பேசில்கள் பாராட்ட தகுந்தவை.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ரெட்மீ 5 இல் ஒரு 5.7-இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளே உடன் 1440 x 720 பிக்சல் பகுப்பாய்வு காணப்படுகிறது. ஆனால் ரெட்மீ நோட் 5 இல் 5.99-இன்ச் எஃப்ஹெச்டி+ டிஸ்ப்ளே உடன் 2160 x 1080 பிக்சல் பகுப்பாய்வை பெற்றுள்ளது. மற்றொருபுறம், ரெட்மீ 5 இல் ஒரு சிறிய 5-இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே உடன் 1280 x 720 பிக்சல் பகுப்பாய்வைக் கொண்டுள்ளது.

மேற்கூறிய மூன்று ஸ்மார்ட்போன்களின் திரை அளவுகள் மற்றும் பகுப்பாய்வு அளவுகளை வைத்து பார்க்கும் போது, ரெட்மீ நோட் 5 இல் உள்ள திரை, தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. ஏனெனில் மற்ற இரண்டையும் விட பெரிய திரை என்பதோடு, கூடுதலான பிக்சல் அளவையும் அளிக்கிறது. இது தவிர, இருபுறமும் மெலிந்த பேசில்களைக் கொண்டிருப்பதால், ஒரு 6-இன்ச் ஸ்மார்ட்போனை நம் கையில் வைத்துள்ள ஒரு உணர்வை, இந்த முழு திரை வடிவமைப்பு அளிப்பதில்லை.

கேமரா

கேமரா

இந்த ஸ்மார்ட்போன்களின் ஆப்டிக்கல் பகுதியை குறித்து பார்த்தால், ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ நோட் 5 ஆகியவை ஒத்த சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன. இவ்விரு ஸ்மார்ட்போன்களிலும் பின்பகுதியில் பிடிஏஎஃப் உடன் கூடிய ஒரு 12எம்பி முக்கிய கேமரா, எஃப்/2.2 துளை மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆகியவை காணப்படுகின்றன. முன்பகுதியில் எல்இடி செல்ஃபீ ஃபிளாஷ் உடன் கூடிய ஒரு 5எம்பி செல்ஃபீ கேமரா உள்ளது. இதற்கு வேறுபட்டதாக, ரெட்மீ 5ஏ இல் எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய ஒரு 13எம்பி பின்பக்க கேமரா, எஃப்/2.2 துளை மற்றும் பிடிஏஎஃப் தவிர, எஃப்/2.0 துளை உடன் கூடிய ஒரு 5எம்பி செல்ஃபீ கேமரா காணப்படுகிறது.

இந்த சியாமி ஸ்மார்ட்போன்களில் இருந்து படப்பிடிப்பில் மேம்பட்ட அம்சங்களை அதிகளவில் நாம் எதிர்பார்க்க முடியாது. அதே நேரத்தில், எங்கள் மதிப்பாய்வு மற்றும் முதல் முறை ஆய்வின் போது, ரெட்மீ நோட் 5 (ரெட்மீ நோட் 5 மதிப்பாய்வை காணவும்) மற்றும் ரெட்மீ 5ஏ ஆகியவை தங்களின் விலை நிர்ணயத்திற்கு ஏற்ற அம்சங்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. எங்கள் மதிப்பாய்வின் மூலம் ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் கேமராவின் செயல்பாட்டை குறித்து அறிந்து கொள்ளலாம். ஆனால் கேமரா செயல்பாட்டை பொறுத்த வரை, ரெட்மீ நோட் 5-யும் அதற்கு ஒத்ததாக தான் இருக்கும் எனத் தெரிகிறது.

செயல்பாடு

செயல்பாடு

ஸ்மார்ட்போன் செயல்படும் முறையைக் குறித்து பலரும் அதிகமாக கவனம் செலுத்துவதால், அதை குறித்து இங்கு காண்போம். ரெட்மீ 5 இல் உள்ள 1.8ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி-யை பயன்படுத்தி இயங்குகிறது.

மேலும் ஒரு 3300எம்ஏஹெச் பேட்டரி மூலம் ஆற்றலைப் பெறுகிறது. ரெட்மீ நோட் 5 இல் ஒரு 2ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி-யை கொண்டுள்ளது என்பதோடு, 4000எம்ஏஹெச் திறனுள்ள பேட்டரி மூலம் வேகமாக சார்ஜ் ஆகி விடுகிறது. ரெட்மீ 5ஏ இல் 1.4ஜிஹெச்இசட் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 எஸ்ஓசி மற்றும் ஒரு 3000எம்ஏஹெச் பேட்டரி காணப்படுகிறது.

மேற்கூறிய மூன்றில் ரெட்மீ நோட் 5 இல் ஒரு மேம்பட்ட செயலி இருப்பதோடு, மற்ற இரண்டு மாடல்களிலும் உள்ளதை விட சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் ரெட்மீ 5ஏ இல் உள்ள 3000எம்ஏஹெச் பேட்டரி, ஸ்மார்ட்போனுக்கு நீண்டகால பேட்டரி திறன் அளிப்பதாக கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது, 4000எம்ஏஹெச் பேட்டரியைக் கொண்ட ரெட்மீ நோட் 5 சிறப்பான செயல்பாட்டை அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரெட்மீ நோட் 5 ஒரு பெரிய டிஸ்ப்ளே மற்றும் சிறந்த செயலியைக் கொண்டுள்ளது என்று கூறப்படுவதால், மற்ற சாதனங்களில் இருப்பதை விட கூடுதல் ஆற்றலை அளிக்கும் பேட்டரியைப் பெற்றிருப்பது தகுதியானது ஆகும்.

சியாமி நிறுவனம் அளிக்கும் இம்மூன்று ஸ்மார்ட்போன்களும், எம்ஐயூஐ 9 அடிப்படையாக கொண்ட ஆன்ட்ராய்டு நெவ்கட்-டில் இயங்குவதோடு, 4ஜி வோல்டி உடன் மற்ற பொதுவான காரியங்களை உட்படுத்திய இணைப்பு அம்சங்களைப் பெற்றதாக உள்ளன. ரெட்மீ 5ஏ இல் ஒரு மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் இரட்டை சிம் கார்டு அமைப்பும் காணப்படுகிறது.

வகைகள் மற்றும் விலைப் பட்டியல்

வகைகள் மற்றும் விலைப் பட்டியல்

இந்தியா போன்ற விலைக்கு முக்கியத்துவம் அளிக்கும் சந்தையில், ஒரு ஸ்மார்ட்போனுக்கு நிர்ணயிக்கப்படும் விலையைப் பொறுத்து, அதன் வெற்றி அமையும். விலை நிர்ணயத்தைப் பொறுத்த வரை, சியாமி நிறுவனம் மிகச் சிறப்பாகச் செயல்படுவதால், இந்தியாவில் பெரிய அளவிலான வெற்றியைப் பெற்று வருகிறது.

மேற்கூறிய இந்த ஸ்மார்ட்போன்களைப் பொறுத்த வரை, சியாமி நிறுவனம் பல்வேறு விதமான ஃபோன்களை, பலதரப்பட்ட விலை நிர்ணயத்துடன் அறிமுகம் செய்துள்ளது. ரெட்மீ 5-யைப் பொறுத்த வரை, 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி நினைவகத்தை கொண்டு ரூ.7,999 விலையிலும், 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி நினைவகத்தை கொண்டு ரூ.8,999 விலையிலும், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி நினைவகத்தை கொண்டு ரூ.10,999 விலையிலும் என்று மொத்தம் 3 வகைகளில் கிடைக்கின்றன.

கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மீ நோட் 5, 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி நினைவகத்தை கொண்டு ரூ.9,999 விலையில் ஒரு வகை, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி நினைவகத்தை கொண்டு ரூ.11,999 ஒரு வகை என்று இரு வகைகளில் கிடைக்கின்றன. ரெட்மீ 5ஏ-யைப் பொறுத்த வரை, மேற்கூறிய மூன்றில் துவக்க-நிலை ஸ்மார்ட்போனாக அமைந்து, இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது.

இதில் முதல் வகை, 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி நினைவகத்தை கொண்டு ரூ.5,999 விலையிலும், மற்றொரு வகை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி நினைவகத்தை கொண்டு ரூ.6,999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இப்போது வரை ரெட்மீ 5ஏ துவக்க நிலை வகையை ரூ.4,999 என்ற விலையில் சியாமி நிறுவனம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து ரூ.1,000 குறைவாக விற்கப்படுகிறது.

அசத்தலான லெனோவா கே5 & கே5 பிளே அறிமுகம்.!அசத்தலான லெனோவா கே5 & கே5 பிளே அறிமுகம்.!

Instagram Simple Tips and Tricks (TAMIL)
முடிவு

முடிவு

சியாமி ஸ்மார்ட்போன்கள் மிகவும் பிரபலமானது என்பதோடு, இந்தியாவில் ஒரு மகத்தான வெற்றியை அடைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கான ஃபிளாஷ் சேல்ஸில், ஒரு சில நிமிடங்களில் இருப்பு தீர்ந்தது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போன்கள் விலைக் குறைவாக அளிக்கப்படுகிறது என்பதற்காக, அதன் அம்சங்களில் சீன தயாரிப்பாளர் நிறுவனத்தால் எந்தவிதமான சமரசமும் செய்யப்படவில்லை.

ஸ்மார்ட்போனின் செயல்பாட்டை அதிகமாக விரும்பும் நபராக இருக்கும் பட்சத்தில், ரெட்மீ நோட் 5-யை தேர்ந்தெடுக்கலாம். மேலும் ரூ.10 ஆயிரம் என்ற விலை நிர்ணயத்திற்குள் அமையும் வகையிலான ஸ்மார்ட்போனை நீங்கள் எதிர்பார்ப்பதாக இருந்தாலும், ஒரு சிறப்பான செயல்பாட்டை அளிக்கக்கூடிய ரெட்மீ 5-யை, அமேசான் மற்றும் Mi.com இலிருந்து வாங்க முடியும். ரெட்மீ 5-யை நீங்கள் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், அதன் விற்பனை இந்த மாதம் 20 ஆம் தேதியில் இருந்து மட்டுமே துவங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை ஆஃப்லைனில் பெறுவதற்கு குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

மற்றொருபுறம், ரூ.7 ஆயிரம் என்ற விலைக்கு உட்பட்டதாக அமையும் ஸ்மார்ட்போனை வாங்கும் வகையில், உங்கள் செலவு நிர்ணயம் மிக குறுகியதாக இருந்தால், தேஷ் கா ஸ்மார்ட்போன் (தேசத்தின் ஸ்மார்ட்போன்) என்று அழைக்கப்படும் ரெட்மீ 5ஏ-யை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். மற்ற இரண்டு ரெட்மீ ஃபோன்களில் உள்ள கைரேகை சென்ஸர் மற்றும் முழு திரை வடிவமைப்பு போன்ற ஒரு சில அம்சங்கள் இல்லாவிட்டாலும், தனது பேட்டரி செயல்பாட்டின் மூலம் உங்களை ஏமாற்றமடைய செய்யாது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Redmi 5 vs Redmi Note 5 vs Redmi 5A comparison will let you figure out which of these budget smartphones from Xiaomi will be a great choice for you and your requirements. We have compared these smartphones in terms of design, performance, camera, and pricing. Take a look at the comparison and decide on one.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X