நம்பமுடியாத பேட்டரி நீட்டிப்பு : அடுத்த கட்டத்திற்கு சென்ற ரெட்மீ 5ஏ.!

போஸ்டரில் காட்சிப்படும் கருவியானது ரெட்மீ 4ஏ சாதனத்தை விட மிக வித்தியாசமாக இல்லாத ஒரு தொலைபேசி வடிவமைப்பையே வெளிப்படுத்துகிறது.

|

இந்திய சந்தையில் "சக்கைப்போடு போடும்" சியோமி நிறுவனத்தின் ரெட்மீ ஸ்மார்ட்போன் வரிசையில் வெளியாகும் அடுத்த சாதனம், நோக்கியா கருவிகளின் மிகவும் பாரம்பரியம் மிக்க "முரட்டுத்தனமான" பேட்டரித்திறனுடன் போட்டிபோடும் என்பது போல் தெரிகிறது.

தற்போது வெளியாகியுள்ள சியோமி ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போன் சார்ந்த அதிகாரப்பூர்வ தகவலொன்று ரெட்மீ 5ஏ ஆனது ஒரு முழு உலோக உடல் மற்றும் ஒரு 8-நாள் காத்திருப்பு பேட்டரி ஆயுள் கொண்டிருக்கும் என்று வெளிப்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி இக்கருவி என்னென்ன அம்சங்கள் கொண்டிருக்கும் என்பதையும் வெளியான 'போஸ்டர்' மூலம் அறிய முடிகிறது.

ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ 5 ப்ளஸ் உடன்.!

ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ 5 ப்ளஸ் உடன்.!

பல முக்கிய விவரங்களை வெளிப்படுத்தும் இந்த போஸ்டர், ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ 5 ப்ளஸ் இணைத்தே அதன் ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என்றும் ஊகிக்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ போஸ்டர்.!

அதிகாரப்பூர்வ போஸ்டர்.!

சீனாவின் மைக்ரோ-பிளாக்கிங் தளமான விபோவில் தோன்றிய இந்த போஸ்டரை முதலில் கிஸ்மோசீனா மூலம் காணப்பட்டுள்ளது. போஸ்டரில் காட்சிப்படும் கருவியானது ரெட்மீ 4ஏ சாதனத்தை விட மிக வித்தியாசமாக இல்லாத ஒரு தொலைபேசி வடிவமைப்பையே வெளிப்படுத்துகிறது.

உலோகம் மற்றும் பிளாஸ்டிக்.!

உலோகம் மற்றும் பிளாஸ்டிக்.!

எனினும், ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போனில் ரெட்மீ 4ஏ கொண்டிராத வண்ணம், உலோகம் மற்றும் பிளாஸ்டிக் உடல் வடிவமைப்பை பெறும் என்பது போல் தோன்றுகிறது.

ஸ்டான்ட்பை நேரம்.!

ஸ்டான்ட்பை நேரம்.!

இக்கருவியின் பேட்டரி திறன் பற்றிய துல்லியமான தகவல் இல்லாவிட்டாலும் கூட, இந்த தொலைபேசி 8 நாள் வரையிலான (ஸ்டான்ட்பை) காத்திருப்பு நேரம் வழங்குமென்று போஸ்டரில் வெளிப்படையாக கூறப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு நௌவ்கட்.!

ஆண்ட்ராய்டு நௌவ்கட்.!

மேலேயும் இந்த போஸ்டரில் இருந்து, இக்கருவி ஒரு ஸ்னாப்டிராகன் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு நௌவ்கட் அடிப்படையிலான மியூஐ (பெட்டிக்கு வெளியே) மூலம் இயக்கப்படும் என்பதும் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2ஜிபி / 3ஜிபி ரேம்.!

2ஜிபி / 3ஜிபி ரேம்.!

ஒரு சில வாரங்களுக்கு முன்னர், சீனாவின் கட்டுப்பாட்டு அமைப்பான டிஇஎன்ஏஏ (TENNA) தலத்தில் காணப்பட்ட சியோமி ரெட்மீ 5ஏ ஆனது ஒரு 5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 425 ப்ராஸசர், 2ஜிபி / 3ஜிபி ரேம், 16 ஜிபி / 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்தியது.

சியோமி ரெட்மீ நோட் 5.!

சியோமி ரெட்மீ நோட் 5.!

இதற்கிடையில், சியோமி ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போனின் வெற்றியைத்தொடர்ந்து அதன் அடுத்த பதிப்பான சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போன் சார்ந்த பணிகளும் நடைபெற்று வருகின்றன. வரவிருக்கும் நாட்களில் வெளியாகமென எதிர்பார்க்கப்படும் இக்கருவி ஒரு 18: 9 என்ற காட்சி விகிதம் மற்றும் இரட்டை கேமராக்கள் ஆகிய அம்சங்களை கொண்டு வெளியாக வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 5A official poster leaked, reveals full metal body, 8 days standby time. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X