அறிமுகம்: ரூ.4,999/- என்கிற சூப்பர்-பட்ஜெட் விலையில் சியோமி ரெட்மீ 5ஏ.!

Written By:

சியோமி நிறுவனத்திடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'தேஷ் கா ஸ்மார்ட்போன்' அல்லது 'மேட் இன் இந்தியா' ஸ்மார்ட்போன் ஆன ரெட்மீ 5ஏ இன்று (வியாழன்) ரூ.4,999/- என்கிற சூப்பர் பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ளது.

அறிமுகம்: ரூ.4,999/- என்கிற சூப்பர்-பட்ஜெட் விலையில் சியோமி ரெட்மீ 5ஏ!

சியோமி ரெட்மீ 5ஏ ஆனது 2 ஜிபி ரேம் / 16 ஜிபி சேமிப்பு என்கிற மாறுபாட்டில் அறிமுகமாகியுள்ளது. இதே சாதனம் 3 ஜிபி ரேம் / 32 ஜிபி சேமிப்பு மாறுபாட்டிலும், ரூ.6,999/- என்கிற விலை நிர்ணயத்தின் கீழ் கிடைக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டிசம்பர் 7-ஆம் தேதி முதல் ஆப்லைனிலும் கிடைக்கும்.!

டிசம்பர் 7-ஆம் தேதி முதல் ஆப்லைனிலும் கிடைக்கும்.!

முன்னர் அறிவிக்கப்பட்டபடியே சியோமி ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போன் ஆனது பிரபல இ காமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்டிலும் மற்றும் நிறுவனத்தின் மி.காம்/இன் வழியாகவும் வாங்குவதற்கு கிடைக்கும். வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி முதல் தொடங்கி நிறுவனத்தின் பிரத்யேக சில்லறை பங்குதாரர்கள் மற்றும் மி ஹோம் ஸ்டோர்களின் வழியாக ஆப்லைனிலும் கிடைக்கும்.

ரூ.1000/- அதிகரிக்கப்படும், எப்போது.?

ரூ.1000/- அதிகரிக்கப்படும், எப்போது.?

ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் / 16 ஜிபி சேமிப்பு பதிப்பானது முதல் 50 லட்சம் யூனிட்களின் விற்பனை காலம் வரை மட்டுமே ரூ.4,999/- என்கிற விலை டேக் கொண்டிருக்கும் அதன் பின்னர் சுமார் ரூ.1000/- அதிகரிக்கப்பட்டு ரூ.5,999/-க்கு கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன்.!

இந்தியாவிற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன்.!

ரெட்மீ 5ஏ ஆனது ஒரு இந்தியா பதிப்பாகும். இரண்டு நானோ சிம் அட்டைகள் மற்றும் சேமிப்பு விரிவாக்கம் உடன் மைக்ரோ எஸ்டி அட்டைக்கான ஒரு பிரத்யேக ஸ்லாட் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கருவியின் 3 ஜிபி ரேம் / 32 ஜிபி சேமிப்பு மாறுபாடானது இந்தியாவில் மட்டுமே கிடைக்கும், சீனாவில் அதன் 2 ஜிபி ரேம் / 16 ஜிபி வேரியண்ட் மட்டுமே கிடைக்கிறது.

சியோமி ரெட்மீ 5ஏ அம்சங்கள்.!

சியோமி ரெட்மீ 5ஏ அம்சங்கள்.!

ரெட்மீ 4ஏ ஸ்மார்ட்போனின் அடுத்த அப்டேட் கருவியான ரெட்மீ 5ஏ ஆனது, கிட்டத்தட்ட அதன் முன்னோடி கொண்டுள்ள வன்பொருள்களையே தன்னுள் கொண்டுள்ளது உடன் ரெட்மீ 4ஏ ஸ்மார்ட்போனை போன்றே ஆல்-பிளாஸ்டிக் உடல் அமைப்பை கொண்டுள்ளது. பின்புறத்தில் ஒரு மென்மையான மெட்டல் பூச்சுடன் மூன்று வண்ணங்களில் - இருண்ட சாம்பல், தங்கம் மற்றும் ரோஜா தங்கம் -கிடைக்கிறது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ரெட்மீ 4ஏ போலவே, ரெட்மீ 5ஏ ஒரு கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது. வன்பொருள் அம்சங்களை பொறுத்தவரை, ரெட்மீ 5ஏ ஆனது 720பி என்கிற தீர்மானம் கொண்ட 5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 1.4ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 425 பிராஸசர் உடனான அட்ரெனோ 308 ஜிபியூ கொண்டு இயக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு நௌவ்கட்

ஆண்ட்ராய்டு நௌவ்கட்

3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி வரை உள் நினைவகம் கொண்டுள்ள ரெட்மே 5ஏ, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் மேலும் 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்லாட் கொண்டுள்ளது. இரட்டை சிம் ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு நௌவ்கட் அடிப்படையிலான மியூஐ 9 கொண்டு இயங்கும் மற்றும் 4ஜி எல்டிஇ (வோல்ட் -ரெடி) இணைப்புகளையும் ஆதரிக்கும்.

13எம்பி ரியர் கேமரா

13எம்பி ரியர் கேமரா

கேமராத்துறையை பொறுத்தமட்டில், ரெட்மீ 5ஏ ஆனது, எப் / 2.2 துளை மற்றும் பிடிஏஎப் (ஆட்டோஃபோகஸ்) மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13எம்பி ரியர் கேமரா கொண்டுள்ளது. முன்பக்கம் ஒரு 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ள இந்த தொலைபேசியை ஒரே சார்ஜில் 8-நாட்களுக்கு பேட்டரி ஆயுள் வரை வழங்குவதாக நிறுவனம் கூறுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Xiaomi Redmi 5A made in India entry-level phone for masses launched, price starts at Rs 4,999. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot