சூப்பர் பட்ஜெட் விலையில் சியோமி ரெட்மீ 5-ன் இந்திய விற்பனை அறிவிப்பு.!
நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் விலை கருவியான சியோமி ரெட்மீ 5 ஆனது, அடுத்த மாதம் (பிப்ரவரி) உலகளாவிய முறையில் விற்பனைக்கு வருகிறது.
போதுமான அளவிலான மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை களமிறக்கிவிட சியோமி நிறுவனம் இப்போது அதன் சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. நீங்களொரு சியோமி பிரியர் என்றாலும் சரி அல்லது பட்ஜெட் வாசி என்றாலும் சரி - வரப்போகும் அடுத்த சியோமி ஸ்மார்ட்போன் ஆனது உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்பதை வெளிப்படுத்தும் தகவலொன்று சிக்கியுள்ளது.
அதாவது நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் விலை கருவியான சியோமி ரெட்மீ 5 ஆனது, அடுத்த மாதம் (பிப்ரவரி) உலகளாவிய முறையில் விற்பனைக்கு வருகிறது. இந்த சீன நிறுவனத்தின் பிரதான சந்தை இந்தியா தான் என்பதால், உலகளாவிய விற்பனை அறிவிக்கப்பட்ட கையோடு ரெட்மீ 5 ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தைக்குள் தான் நுழையுமென்பதில் சந்தேகமே வேண்டாம்.

உலகளாவிய விற்பனை
18: 9 என்கிற திரை விகிதம் கொண்ட சியோமி ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ 5 ப்ளஸ் ஆகிய இரண்டு கருவிகளும் கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இரண்டு சாதனங்களுமே ஊடக மற்றும் நுகர்வோர் மத்தியில் ஒரு பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. இருப்பினும் கூட இதன் உலகளாவிய விற்பனை அறிவிக்கப்படாமலேயே இருந்தது.

எச்டி பிளஸ் டிஸ்ப்ளே
சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், இக்கருவி 1440 x 720 பிக்சல்கள் என்கிற அளவிலான தீர்மானம் மற்றும் 450நிட்ஸ் பிரைட்னஸ் லெவல்ஸ் கொண்ட ஒரு 5.7 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

2ஜிபி / 3 ஜிபி ரேம்
க்வால்காம் ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி உடனாக 2ஜிபி / 3 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி / 32 ஜிபி அளவிலான உள்ளடக்க செழிப்புடன் இணைக்கப்பட்டுள்ள இக்கருவி துரதிருஷ்டவசமாக அதன் பேட்டரித்திறனை 3300எம்ஏஎச் என்று குறைந்துக்கொண்டுள்ளது.

பேட்டரித்திறன்
ஒருகையில் பேட்டரித்திறன் குறைக்கப்பட்டாலும், மறுகையில் ஸ்மார்ட்போனின் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் ஆனது ஒரு சக்தி திறன் மிகுந்த சிப்செட் ஆக பணியாற்றும் என்பதில் சந்தேகமில்லை. முன்னர் வெளியான சியோமி ரெட்மீ 4 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது சுமார் 800 எம்ஏஎச் அளவிலான பேட்டரித்திறன் குறைக்கப்பட்டுள்ளது


கேமரா
கேமராத்துறையை பொறுத்தமட்டில், ரெட்மீ 5 ஆனது எப் / 2.2 துலையுடனான 12எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது. இது சிறந்த செயல்திறனை வழங்குவதாகக் கூறப்படுகிறது. முமுன்பக்கம் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 5எம்பி சென்சார் உள்ளது.

கைரேகை ஸ்கேனர்
இரட்டை சிம் ஸ்லாட் மற்றும் ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழங்கும் ரெட்மீ 5 ஆனது ரெட்மீ நோட் 4 போன்றே இந்திய நுகர்வோர்களை பெரிதளவில் கவர்ந்து மற்றொரு பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போனாக உருவெடுக்கும் என்று நம்பப்படுகிறது. பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் ஒன்று பொருத்தப்பட்டுள்ள இந்த சாதனம் ஆண்ட்ராய்டு நௌவ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் மியூஐ 9 கொண்டு இயங்குகிறது.

இந்திய விலை நிர்ணயம்
இந்திய விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் 2ஜிபி+16ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது ரூ.6,999/-க்கு வெளியாகலாம். இக்கருவி ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி கொண்டுள்ளதால் இதன் விலை நிர்ணயம் ரூ.7,999/- அல்லது அதற்கு மேலான ஒரு விலை நிர்ணயத்தை பெறவும் வாய்ப்பு உள்ளது.

மாற்றுக்கருவி.?
இதற்கிடையில் ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனிற்கான மாற்றுக்கருவி தான் ரெட்மீ 5 ப்ளஸ் என்ற வதந்தியும் நிலவுகிறது. இருப்பினும் இது நம்பும்படியாக இல்லை, ஏனெனில் உலகின் பல நாடுகளில் சிறந்த விற்பனையை சந்தித்து கொண்டிருக்கும் கருவியாக சியோமி ரெட்மீ நோட் 4 திகழ்கிறது, ஆக இந்த ரெட்மீ நோட் வரிசை கருவிகளுக்கு மாற்றுக்கருவி என்ற வார்த்தைக்கே இடமில்லை.

சியோமி ரெட்மீ நோட் 5
அதை உறுதி செய்யும் வண்ணம் வெளியானதொரு புதிய கசிவின்படி, சியோமி ரெட்மீ நோட் 5 ஆனது இந்த 2018 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வெளியாகுமென்றும் மாற்று அது ஸ்னாப்டிராகன் 632 எஸ்ஓசி கொண்டிருக்குமென்றும் வெளிப்படுத்தியுள்ளது. மறுகையில் தற்போது வரையிலாக ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் வெளியீடு தான் உறுதி செய்யப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, ரெட்மீ 5 ப்ளஸ் வெளியீடு பற்றிய எந்த தகவலும் இல்லை.


Click it and Unblock the Notifications