மக்களை ஈர்க்காத சியோமி ரெட்மீ5: காரணம் என்ன?

|

இந்தியாவின் நம்பர் 1 ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் என கூறிக்கொள்ளும் சியோமி, சில வாரங்களுக்கு முன்பு குறைந்த பட்ஜெட் ரெட்மீ5 மொபைலை இந்தியாவில் வெளியிட்டது. ரெட்மீ நோட்5 மற்றும் ரெட்மீ நோட்5 ப்ரோ க்கு பிறகு இது இந்தாண்டின் 3வது சியோமி வெளியிடு ஆகும்.இதன் விலை ரூ7,999 லிருந்து ரூ16,999 வரை உள்ளது.

3GB ரேம் கொண்ட மொபைலின் விலை ரூ8,999 ம், 2GB ரேம் உள்ள மொபைல் ரூ7,999 மற்றும் 4GB ரேம் உள்ள மொபைலின் விலை ரூ10,999 ஆகவும் உள்ளது. ரெட்மீ நோட்4 ஐ விட 2 சென்டிமீட்டர் உயரமான இதில் 5.7 இன்ச் திரை உள்ளது. கருப்பு, கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கிறது. இந்த மொபைலின் நிறை குறைகளை அலசி ஆராய்வோம் வாருங்கள்.

திரை

திரை

ரெட்மீ5 மொபைலின் சிறப்பே 1440×720 பிக்சல் உள்ள 5.2இன்ச் HD திரை தான். 18:9 விகிதத்தில் அமைந்துள்ள இந்த திரை 2.5D வளைந்த கொரில்லா க்ளாஸ்-ஆல் பாதுகாக்கப்படுகிறது.

செயல்திறன்

செயல்திறன்

சியோமி ரெட்மீ5 மொபைல் குவால்காமின் புதிய ஸ்னாப்டிரேகன் 450 இயக்கியையும், அட்ரெனோ 506 கிராபிக்ஸ் வசதியையும் கொண்டுள்ளது. இந்த மொபைலில் சமூகவலைதளம், இசை, வீடியோ என பலவேலைகளை ஒரே நேரத்தில் செய்யமுடியும். கேமிங்கை பொறுத்த வரை Asphalt 8, Airborne மற்றும் சமீபத்தில் வெளியான PUBG, Mobile போன்ற கேம்களை மல்டிடாஸ்க்கிங் செய்யதுகொண்டே விளையாடும் போது சற்று பிரச்சனைகள் இருந்தது. ரேமை கிளியர் செய்த பின்னர் வெப்பமடையும் பிரச்சனைகள் இல்லை.

கேமரா

கேமரா

ரெட்மீ நோட்5 போலவே ரெட்மீ5 ம், h f/2.2 aperture, 1.25 μm pixels, PDAF மற்றும் LEDப்ளேஷ் உள்ள 12மெகா பிக்சல் பின்புற கேமராவும், செல்பி மற்றும் வீடியோ கால் வசதிக்காக LEDப்ளேஷ் உள்ள 5மெகா பிக்சல் முன்புற கேமராவும் உள்ளது.

Panorama, Timer, Audio, Manual, Straighten, Beautiful, HHT, Scene, Beauty mode மற்றும் Tilt-shift என அனைத்து மோடுகளும் இருக்கின்றன.

இயங்குதளம்(OS) மற்றும் பேட்டரி

இயங்குதளம்(OS) மற்றும் பேட்டரி

சியோமி ரெட்மீ 5 க்கு உள்ள ஒரே பின்னடைவு இயங்குதளமும் பேட்டரியும் தான். ஓ.எஸ்ஐ பொறுத்தவரை , MIUI9.2 பயனர் இடைமுகத்துடன் (User interface) வரும் இது ஆண்ராய்டு 7.1.2 நவுகட் டை கூட அடிப்படையாக கொள்ளவில்லை. ஆனால் இதே விலையில் வெளிவரும் சீன மொபைல்களான Infinix Hot S3 (First Impression)andiTel A44 Pro புதிய ஆண்ராய்டு வெர்சனான ஓரியோவை வைத்துள்ளன.

ரெட்மீ4 மொபைல் 4000mAh பேட்டரியுடன் வந்த நிலையில், ரெட்மீ5 ல் பேட்டரி வெறும் 3300mAh தான். இசை, பிரவுசிங், சமூகவலைதளம், வாட்ஸ்ஆப் மற்றும் அழைப்புகள் என சராசரியாக பயன்படுத்தினால் 13-14 மணி நேரம் பேட்டரி தாக்குபிடிக்கும். 0லிருந்து 100% வரை சார்ஜ் ஆக இந்த மொபைல் இரண்டரை மணி நேரம் எடுத்துக்கொள்கிறது.

மக்களை கவர்ந்ததா ரெட்மீ5?

மக்களை கவர்ந்ததா ரெட்மீ5?

ஒரு சராசரி மொபைலான சியோமி ரெட்மீ5 மொபைல், கேமரா மற்றும் பேட்டரி போன்றவற்றால் மக்களை கவர முடியவில்லை. உலகமே ஆண்ராய்டு9.0 பற்றி. பேசும் போது ரெட்மீ5 மட்டும் இன்னும் ஆண்ராய்டு7.0லேயே இருக்கிறது. உங்களுக்கு ரெட்மீ மொபைலே வாங்க வேண்டும் என்றால், மேலும் ஒரு 1000 ரூபாய் போட்டு ரெட்மீ நோட்5 வாங்குங்கள் என்பதே எங்களின் பரிந்துரை.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 5 Review Failed to impress; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X