அறிமுகம்: அட்டகாசமான விலையில், புதிய வடிவமைப்பில் ரெட்மீ 5 மற்றும் 5 ப்ளஸ்.!

சியோமி ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் என்ன.? இந்திய விலை நிர்ணயம் என்ன.? என்பதை விரிவாக காண்போம்.

|

இன்று (வியாழக்கிழமை)சீனாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ரெட்மீ 5 மற்றும் ரெட்மே 5 ப்ளஸ் என்கிற இரண்டு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை சியோமி நிறுவனம் வெளியிட்டது. ரெட்மீ 4 ஸ்மார்ட்போனின் அபார வெற்றியை தொடர்ந்து புதிய வடிவமைப்பு மொழியில், அதாவது முழு-திரை டிஸ்பிளே மற்றும் ஒரு 18: 9 விகிதம் கொண்டு இக்கருவிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அட்டகாசமான விலையில், புதிய வடிவமைப்பில் ரெட்மீ 5 மற்றும் 5 ப்ளஸ்.!

முனைகளில் வளைவுகள் மற்றும் பின்புறத்தில் கைரேகை உணரி என உலோகத்தன்மைமிக்க கட்டமைப்பையும் இக்கருவிகள் முன்வைக்கின்றன. சியோமி ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் என்ன.? இந்திய விலை நிர்ணயம் என்ன.? என்பதை விரிவாக காண்போம்.

ரெட்மீ 5 விலை

ரெட்மீ 5 விலை

ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் 2ஜிபி+ 16ஜிபி என்கிற மாறுபாடு சுமார் ரூ.8,800/- என்றும், அதன் 3ஜிபி + 32 ஜிபி என்கிற மற்றொரு மாறுபாடானது கிட்டத்தட்ட ரூ.7,800/- என்றும் இந்திய விலை நிர்ணயத்தை பெறலாம். சியோமி ரெட்மீ 5 ஆனது பிளாக், ப்ளூ, கோல்ட் மற்றும் பிங்க் ஆகிய நிறங்களில் கிடைக்கும்.

ரெட்மீ 5 ப்ளஸ் விலை

ரெட்மீ 5 ப்ளஸ் விலை

மறுகையில் உள்ள ரெட்மீ 5 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் 3ஜிபி+ 32ஜிபி என்கிற மாறுபாடு சுமார் ரூ.9,800/- என்றும், அதன் 4ஜிபி + 64 ஜிபி என்கிற மற்றொரு மாறுபாடானது கிட்டத்தட்ட ரூ.12,700/- என்றும் இந்திய விலை நிர்ணயத்தை பெறலாம். சியோமி ரெட்மீ 5 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் ரெட்மீ 5 போன்றே பிளாக், ப்ளூ, கோல்ட் மற்றும் பிங்க் ஆகிய நிறங்களில் கிடைக்கும்.

இந்திய விற்பனை

இந்திய விற்பனை

இந்த விலைப்புள்ளியிலிருந்து சந்தையில் கிடைக்கும் 18: 9 என்கிற திரை விகிதம் கொண்ட மிக மலிவான கருவிகள் இவைகள்தான் என்பதை அறியமுடியும். வருகிற டிசம்பர் 12-ஆம் தேதி தொடங்கி சீனாவில் விற்பனையை தொடங்கும் இக்கருவிகளின் இந்திய விற்பனை பற்றிய எந்த வார்த்தையும் இல்லை.

சியோமி ரெட்மீ 5 அம்சங்கள்

சியோமி ரெட்மீ 5 அம்சங்கள்

இக்கருவி ஒரு உன்னதமான 5.7 அங்குல எச்டி+ (720x1440) மற்றும் 18: 9 என்கிற திரை விகிதம் கொண்டுள்ளது. இரண்டு சாதனங்களுமே, பின்புற கேமரா மற்றும் கைரேகை சென்சார் ஆகியவற்றுடன் ஒரு சமச்சீர் வடிவமைப்புடன் பின்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன. சார்ஜிங் போர்டின் இரு பக்கத்திலும் இரண்டு ஸ்பீக்கர் கிரில்களையும் உடன் மேல்பக்கம் 3.5மிமீ ஹெட்ஜாக்கும் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி

ரெட்மீ 5 ஆனது 1.8ஜிகாஹெர்ட்ஸ் உடனான ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி மூலம் 14என்எம் பின்பெட் (FinFET) தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட அட்ரெனோ 506 ஜிபியூ உடன் இணைந்துள்ளது.

ஆண்ட்ராய்டு  7.1 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட்

2ஜிபி + 16ஜிபி மற்றும் 3ஜிபி + 32ஜிபி என்கிற சேமிப்பு கட்டமைப்புகளில் கிடைக்கும். ரெட்மீ 5 ஆனது, ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் மியூஐ9 கொண்டு இயங்குகிறது.

பின்புற கேமரா

பின்புற கேமரா

கேமரா துறையை பொறுத்தமட்டில் ரெட்மீ 5 ஆனது, மேம்பட்ட புகைப்படத்தை எடுக்க உதவும் 1.25 மைக்ரான் பிக்சல் கொண்ட 12-மெகாபிக்சல் சென்சாரை அதன் பின்புறத்தில் கொண்டுள்ளது.

செல்பீ  கேமரா

செல்பீ கேமரா

மறுகையில் 5 மெகாபிக்சல் முன்பக்கம்-எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. அது பியூடிப்பை 3.0 மற்றும் சாப்ட்-டோன்டு செல்பீ லைட் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. ரெட்மீ 5 ஆனது ஒரு 3300எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டடப்படுகின்றது, இது 12 நாட்கள் காத்திருப்பு நேரத்தை வழங்குமென நிறுவனம் கூறியுள்ளது

சியோமி ரெட்மீ 5 ப்ளஸ் அம்சங்கள்

சியோமி ரெட்மீ 5 ப்ளஸ் அம்சங்கள்

பெரிய மாறுபாடான ரெட்மே 5 ப்ளஸ் ஆனது ரெட்மீ 5 ஸ்மார்ட்போனை விட குறுகிய பெஸல்களை கொண்டுள்ளது. ஒரு 5.99 அங்குல முழு எச்டி+ (1080x2160) மற்றும் 18: 9 என்கிற திரை விகிதம் கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி

ரெட்மீ 5 ப்ளஸ் ஆனது 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி உடன் இணைக்கப்பட்ட அட்ரெனோ 506 ஜிபியூ கொண்டு இயங்குகிறது. 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரிகளில் கிடைக்கும்.

மியூஐ9

மியூஐ9

ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் மியூஐ9 கொண்டு இயங்கும் ரெட்மீ 5 ப்ளஸ் ஸ்மார்ட்போனை கேமரா துறையை பொறுத்தமட்டில், எல்இடி ஃப்ளாஷ் மற்றும் பியூடிப்பை 3.0 கொண்ட 5எம்பி முன்பக்க கேமராவை கொண்டுள்ளது.

ஒரு பெரிய 4000எம்ஏஎச் பேட்டரி

ஒரு பெரிய 4000எம்ஏஎச் பேட்டரி

பின்புறம், எல்இடி ஃப்ளாஷ் மற்றும் எப்/2.2 துளை உடனான ஒரு 12 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது மற்றும் ரெட்மீ 5 உடன் ஒப்பிடும்போது ஒரு பெரிய 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது, இது 17 நாட்கள் வரையிலான காத்திருப்பு நேரத்தை வழங்குமென வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 5, Redmi 5 Plus launched with 18:9 bezel-less screens, full metal bodies & MIUI 9 software. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X