சியோமி ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ 5 ப்ளஸ்: நம்பமுடியாத அம்சங்களுடன்.!

|

மிகவும் எதிர்பார்க்கப்படும் சியோமி ரெட்மீ 5, ரெட்மீ 5 ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் வருகிரியா டிசம்பர் 7-ஆம் தேதியன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. சியோமி நிறுவனம் இந்த அறிவிப்பை விபோ மூலம் வெளியிட்டது. மேலும் வெளியான இடுகையில் அக்கருவிகள் "ஃபுல் ஸ்க்ரீன்" டிஸ்பிளே கொண்டிருக்கும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்போல் எந்தவிதமான ஒளிவுமறைவு இல்லாமல் சியோமி நிறுவனம் மிகவும் வெளிப்படையாக, 18: 9 என்கிற திரை விகிதம் கொண்ட அதன் ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ 5 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய இரண்டு மாறுபாடுகளில் ஒன்று, சீன தொலைதொடர்பு சான்றிதழ் ஆணையமான டிஇஎன்ஏஏ தளத்தில் காணப்பட்டுள்ளது. அது சாமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போனாக இருக்கலாமென தோன்றுகிறது.

வெளியீட்டுத் தேதி

வெளியீட்டுத் தேதி

வெளியான விபோ இடுகையில், கூறப்படும் ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ 5 ப்ளஸ் கருவிகள் வழக்கமான வடிவமைப்பை விட சற்று உயரமாக இருக்கும் மற்றும் அதன் வெளியீட்டுத் தேதி தவிர வேறெந்த விவரங்களும் வெளிப்படவில்லை. இருப்பினும், தரசான்றிதழ் வலைத்தளத்தில் காணப்பட்ட எம்டிஇ1 மற்றும் எம்டிடி1 என்கிற மாடல் எண் கொண்ட கருவிகள் ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ 5 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை ஒத்துளள்ன.

டிஸ்பிளே

டிஸ்பிளே

அக்கருவிகள் 720x1440 பிக்சல்கள் என்கிற தீர்மானம் கொண்ட 5.7 அங்குல எச்டி ப்ளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. மற்றும் அவைகள் வன்பொருள் கொள்ளளவு பொத்தான்களை அகற்றுவதன் மூலம் சற்று அதிகமான உயரம் கொண்டிருக்கும். அதாவது அசல் சியோமி ரெட்மீ 4 ஸ்மார்ட்போனின் சட்டத்தில் சற்று பெரிய அளவிலான டிஸ்பிளே பொருத்தப்பட்டிருக்கும்.

ரெட்மீ 5 ப்ளஸ்

ரெட்மீ 5 ப்ளஸ்

முதலில் போனெரெனா மூலம் காணப்பட்ட இந்த பட்டியலில், ரெட்மீ 5 மற்றும் 5 ப்ளஸ் கருவிகளானது ரெட்மீ 4 ஸ்மார்ட்போனின் 5 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கும் பரிமாணங்களைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவில் பெரியதாக இருப்பதை காட்டுகிறது. ஸ்லாஷ்லீக்ஸ் பட்டியலும் இதை உறுதிப்படுத்துகிறது.

ஸ்னாப்ட்ராகன் 450 அல்லது ஸ்னாப்ட்ராகன் 625

ஸ்னாப்ட்ராகன் 450 அல்லது ஸ்னாப்ட்ராகன் 625

இக்கருவிகளின் விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், சுமார் ரூ.13,600/- என்கிற விலைப்புள்ளியை எட்டலாம். இதன் முதல் விற்பனையானது டிசம்பர் 10-ஆம் தேதி நிகழலாம். டிஇஎன்ஏஏ பட்டியலின்படி, ரெட்மீ 5 ஆனது ஸ்னாப்ட்ராகன் 450 அல்லது ஸ்னாப்ட்ராகன் 625 உடனான 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எஸ்ஓசி கொண்டு இயங்கலாம். ரெட்மீ 4 ஆனது ஒரு ஸ்னாப்டிராகன் 435 எஸ்ஓசி கொண்டு இயங்குவதால் அதே ஸ்னாப்டிராகன் 400 தொடர் செயலியை நிறுவனம் பின்பற்றலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

2ஜிபி, 3ஜிபி மற்றும் 4ஜிபி

2ஜிபி, 3ஜிபி மற்றும் 4ஜிபி

மேலும் ரெட்மீ 5 ஸ்மார்ட்போனை பொறுத்தமட்டில், 2ஜிபி, 3ஜிபி மற்றும் 4ஜிபி என மொத்தம் மூன்று மாறுபாடுகளில் வெளியாகும் என்றும் தரசான்றிதழ் பட்டியல் குறிப்பிட்டுள்ளது. உள்ளடக்க சேமிப்பை பொறுத்தமட்டில் இக்கருவி - 16 ஜிபி, 32 ஜிபி, மற்றும் 64 ஜிபி கொண்டிருக்கலாம். உடன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடியதாகவும் இருக்கலாம்.

3200எம்ஏஎச் பேட்டரி

3200எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போன் ஒரு 3200எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாமென பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த இடத்தில ரெட்மீ 4 ஆனது ஒரு 4100எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. கேமராத்துறையை பொறுத்தமட்டில், இக்கருவி ஒரு 12 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இயக்கமுறைமை

இயக்கமுறைமை

அளவீட்டில், 151.8x72.8x7.7 மிமீ மற்றும் 157 கிராம் எடை கொண்டுள்ளதென்றும், ஆண்ட்ராய்டு 7.1.2 அடிப்படையிலான மியூஐ9 இயக்கமுறைமையின்கீழ் இயங்கலாமென்றும் பட்டியலிடப்பட்டுள்ளது.இக்கருவி அதன் பின்புற பழக்கத்தில் கைரேகை ஸ்கேனர்ற ஒன்றையும் கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 625 அல்லது ஸ்னாப்டிராகன் 630

ஸ்னாப்டிராகன் 625 அல்லது ஸ்னாப்டிராகன் 630

முந்தைய கசிவை அடிப்படையாகக் கொடு பார்த்தால், ரெட்மீ 5 ப்ளஸ் ஆனது ஸ்னாப்டிராகன் 625 அல்லது ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி கொண்டு, வேறுபட்ட ரேம் மற்றும் சேமிப்பு வகைகளில் வெளியாகலாம். மற்றும் ஒரு பெரிய 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி ரெட்மீ 5 மற்றும் ரிடமே 5 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களின் அதிகாரபூர்வமான அம்சங்களை அறிய நாம் டிசம்பர் 7-ஆம் தேதி நடக்கும் வெளியீடு நிகழ்வு வரை காத்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 5, Redmi 5 Plus Launch Set for December 7; 18:9 Displays Teased. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X