5.99-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ரெட்மீ 5 பிளஸ் (அம்சங்கள்).!
இக்கருவி 12எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் ஸ்பீக்கர் வடிவமைப்பில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
தற்சமயம் சியோமி ஸ்மார்ட்போன் மாடலுக்கு வைஃபை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் சியோமி நிறுவனம் ரெட்மீ 5 பிளஸ் ஸ்மார்ட்போனை இந்திய மொபைல் சந்தையில் இந்த மாதம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சியோமி ரெட்மீ 5 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.99-இன்ச் டிஸ்பிளே:
சியோமி ரெட்மீ 5 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கேமரா:
இக்கருவி 12எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் ஸ்பீக்கர் வடிவமைப்பில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

குவால்காம்:
இந்த சியோமி ரெட்மீ 5 பிளஸ் சாதனம் பொதுவாக குவால்காம் மற்றும் ஸ்னாப்டிராகன் 625எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது,மேலும் ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

உள்ளடக் மெமரி:
இக்கருவி 3ஜிபி/4 ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக் மெமரியுடன் வெளிவரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.


இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

4000எம்ஏஎச்:
சியோமி ரெட்மீ 5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications