விரைவில் : 5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சியோமி ரெட்மி 5 பிளஸ்.!
சியோமி ரெட்மி 5 பிளஸ் பொறுத்தவரை 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மீடியாடெக் செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனம் கடைசியாக மி மிக்ஸ் 2 மற்றும் மி நோட் 3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியது, இதை தொடர்ந்து விரைவில் சியோமி ரெட்மி 5 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

சியோமி ரெட்மி 5 பிளஸ் பொறுத்தவரை 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மீடியாடெக் செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது மொபைல் சந்தையில் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

5.5-இன்ச் டிஸ்பிளே:
சியோமி ரெட்மி நோட் 5 பொதுவாக 5.5-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது
இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 7.1:
ரெட்மி நோட் 5 பொறுத்தவரை மீடியாடெக் ஹீலியோ பி25 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 12மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

4000எம்ஏஎச்:
சியோமி ரெட்மி நோட் 5 பொறுத்தவரை 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications