ரெட்மி நோட் 5 பதிலாக வரும் அசத்தலான ரெட்மி 5 பிளஸ்.!

சியோமி ரெட்மி 5 பிளஸ் சாதனம் பொதுவாக குவால்காம் மற்றும் ஸ்னாப்டிராகன் 625எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது,மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

By Prakash
|

இணையத்தில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் ரெட்மி நோட் 5 பதிலாக வரும் அசத்தலான ரெட்மி 5 பிளஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது, இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு குறிப்புகள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

 ரெட்மி நோட் 5 பதிலாக வரும் அசத்தலான ரெட்மி 5 பிளஸ்.!

வரும் பிப்ரவரி மாதம் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போனில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

5.99-இன்ச் டிஸ்பிளே:

5.99-இன்ச் டிஸ்பிளே:

சியோமி ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

இக்கருவி 12எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் ஸ்பீக்கர் வடிவமைப்பில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

குவால்காம்:

குவால்காம்:

இந்த சியோமி ரெட்மி 5 பிளஸ் சாதனம் பொதுவாக குவால்காம் மற்றும் ஸ்னாப்டிராகன் 625எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது,மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளடக் மெமரி:

உள்ளடக் மெமரி:

இக்கருவி 3ஜிபி/4 ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக் மெமரியுடன் வெளிவரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்பின் பல இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

4000எம்ஏஎச்:

4000எம்ஏஎச்:

சியோமி ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 5 Plus to launch as Redmi Note 5 in India ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X