ஆளுக்கு ரெண்டு ரெட்மீ 5 பார்சல்; சியோமி ரெட்மீ 5-யின் 'ஓப்பன் சேல்' அறிவிப்பு.!

மொத்தம் நான்கு நிறங்களில் - தங்கம், கருப்பு, ரோஜா தங்கம் மற்றும் ப்ளூ - கிடைக்கும் ரெட்மீட் 5-யின் அம்சங்களை பொறுத்தவரை இரட்டை சிம் ஆதரவு கொண்டுள்ளது.

|

இந்தியாவின் சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன சியோமி ரெட்மீ 5-யின் நிரந்தரமான விற்பனை, அமேசான்.இன் மற்றும் மிகாம் தளத்தில் தொடங்கியுள்ளது. நிரந்தரமான விற்பனை என்றால் முன்பதிவு செய்ய வேண்டியது இல்லை மற்றும் குறைவான எண்ணிக்கையில் வாங்கி கிடைக்கும் பிளாஷ் விற்பனை அல்ல என்று அர்த்தம்.

ஆளுக்கு ரெண்டு ரெட்மீ 5 பார்சல்; சியோமி ரெட்மீ 5 ஓப்பன் சேல் அறிவிப்பு

சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த விற்பனையில் சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி / 16 ஜிபி, 3 ஜிபி / 32 ஜிபி, மற்றும் 4 ஜிபி / 64 ஜிபி ஆகிய மூன்று சேமிப்பு வேரியன்ட்களும் வாங்க கிடைக்கும்.

மொத்தம் நான்கு நிறங்களில் - தங்கம், கருப்பு, ரோஜா தங்கம் மற்றும் ப்ளூ - கிடைக்கும் ரெட்மீட் 5-யின் அம்சங்களை பொறுத்தவரை இரட்டை சிம் ஆதரவு கொண்டுள்ளது, ஆண்ட்ராய்டு நௌவ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் மியூஐ9 கொண்டு இயங்குகிறது.

ஒரு 5.7 இன்ச் எச்டி+ (720x1440 பிக்சல்கள் மற்றும் 18: 9 திரை விகிதம்) கொண்டுள்ளது, புல் வியூ டிஸ்பிளே கொண்ட மிகமலிவான ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும். க்வால்காம் ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி உடனான 2 ஜிபி / 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி / 32 ஜிபி / 64 ஜி[பி கொண்டு இயங்குகிறது. கேமராவை பொறுத்தவரை, எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு 12 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் செல்பீக்கள்/ வீடியோ அழைப்புகளுக்கான ஒரு 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் அடிப்படி மாடல் ரூ.7,999/- முதல் துவங்குகிறது. ரெட்மீ 5 ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு ரூ.2,200/- கேஷ்பேக் உடன் டேட்டா நன்மைகளையும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. ரெட்மீ 5 தவிர அமேசான் தளத்தில் கின்டெல் இபுக்-களுக்கு 90 சதவிகித தள்ளுபடி (ரூ.400 ரூபாய் வரை), எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு 5 சதவிகித உடனடி தள்ளுபடி (ரூ.500 ரூபாய் வரை) கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 5 Open Sale Now Permanent on Amazon India, Mi.com. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X