Home
Mobile

கனவு விலையில் ரெட்மீ 5; இதோ இந்தியாவின் அடுத்த பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன்.!

எக்கச்சக்கமான மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை களமிறக்கிவிட சியோமி நிறுவனம் இப்போது மேலுமொரு சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் களமிறங்கியுள்ளது.

By Muthuraj

எக்கச்சக்கமான மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை களமிறக்கிவிட சியோமி நிறுவனம் இப்போது மேலுமொரு சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் களமிறங்கியுள்ளது.

நீங்களொரு சியோமி பிரியர் என்றாலும் சரி அல்லது பட்ஜெட் வாசி என்றாலும் சரி - வெளியாகியுள்ள ரெட்மீ 5 ஆனது உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்பதில் சந்தேகமே வேண்டாம். சீனாவிற்கு அடுத்தபடியாக சியோமி நிறுவனத்தின் பிரதான சந்தை இந்தியா தான் என்பதால் அதற்கேற்ற புத்திசாலித்தனமான விலை நிர்ணயத்தையும் ரெட்மீ 5 கொண்டுள்ளது.

2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி.!

2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி.!

சியோமி ரெட்மீ 5 ஆனது பிளாக், கோல்ட், ரோஸ் கோல்ட் மற்றும் லேக் ப்ளூ ஆகிய வண்ண மாறுபாடுகளில் வெளியாகியுள்ளது. விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது ரூ.7999/-க்கு இந்திய சந்தையில் (பிரத்யேகமாக அமேசான் தளத்தில்) வாங்க கிடைக்கும்.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி.!

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி.!

மறுகையில் உள்ள 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது ரூ.8999/-க்கும் மற்றும் இறுதி மாறுபாடான 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது ரூ.10,999/-க்கும் இந்தியாவில் (பிரத்யேகமாக அமேசான் தளத்தில்) வாங்க கிடைக்கும்.

 5.7 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே.!

5.7 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே.!

சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், இக்கருவி 1440 x 720 பிக்சல்கள் என்கிற அளவிலான தீர்மானம், 18: 9 என்கிற திரை விகிதம் மற்றும் 450நிட்ஸ் பிரைட்னஸ் லெவல்ஸ் கொண்ட ஒரு 5.7 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

பேட்டரித்திறன்.!

பேட்டரித்திறன்.!

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி உடனாக 2ஜிபி / 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி / 32 ஜிபி மற்றும் 64ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ள இக்கருவி துரதிருஷ்டவசமாக அதன் பேட்டரித்திறனை 3300எம்ஏஎச் என்று குறைந்துக்கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்.!

ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்.!

ஒருகையில் பேட்டரித்திறன் குறைக்கப்பட்டாலும், மறுகையில் ஸ்மார்ட்போனின் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் ஆனது ஒரு சக்தி திறன் மிகுந்த சிப்செட் ஆக பணியாற்றும் என்பதில் சந்தேகமில்லை. முன்னர் வெளியான சியோமி ரெட்மீ 4 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது சுமார் 800 எம்ஏஎச் அளவிலான பேட்டரித்திறன் குறைக்கப்பட்டுள்ளது.

12எம்பி பின்புற கேமரா.!

12எம்பி பின்புற கேமரா.!

கேமராத்துறையை பொறுத்தமட்டில், ரெட்மீ 5 ஆனது எப் / 2.2 துலையுடனான 12எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது. இது சிறந்த செயல்திறனை வழங்குவதாகக் கூறப்படுகிறது. முமுன்பக்கம் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 5எம்பி சென்சார் உள்ளது.

மற்றொரு பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன்.!

மற்றொரு பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன்.!

கைரேகை ஸ்கேனர் இரட்டை சிம் ஸ்லாட் மற்றும் ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழங்கும் ரெட்மீ 5 ஆனது ரெட்மீ நோட் 4 போன்றே இந்திய நுகர்வோர்களை பெரிதளவில் கவர்ந்து மற்றொரு பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போனாக உருவெடுக்கும் என்று நம்பப்படுகிறது.

How to check PF Balance in online (TAMIL)
ஆண்ட்ராய்டு நௌவ்கட்.!

ஆண்ட்ராய்டு நௌவ்கட்.!

பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் ஒன்று பொருத்தப்பட்டுள்ள இந்த சாதனம் ஆண்ட்ராய்டு நௌவ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் மியூஐ 9 கொண்டு இயங்குகிறது. மேலும் பல ஸ்மார்ட்போன்கள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவுடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 5 with 5.7-inch full-screen display, Snapdragon 450 launched in India starting at Rs. 7999. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X