இந்தியாவின் சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன்: சியோமி ரெட்மீ 5.!

|

சியோமி ரெட்மீ 5-இல் ஒரு 5.7 இன்ச் திறன் கொண்ட தொடுதிரை டிஸ்ப்ளே உடன் கூடிய 720 * 1440 பிக்சல் பகுப்பாய்வு திரையை கொண்டு உள்ளது. இதில் ஆன்ட்ராய்டு நெவ்கட் 7.1.2 உடன் அதன் மேற்பகுதியில் நிலையான எம்ஐயூஐ 9 காணப்படுகிறது.

இந்தியாவின் ஸ்மார்ட்போன்களுக்கான சந்தையில் கடந்த சில காலமாக, தனது புதிய அறிமுகங்களின் மூலம் சியாமி நிறுவனம் கொடிகட்டி பறக்கிறது. இந்நிலையில், கட்டுபடியாகும் விலை நிர்ணயத்தில் ரெட்மீ 5-யை இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்து உள்ளது சியாமி நிறுவனம். இந்த சியோமி ரெட்மீ ரூ.7,999 என்ற விலை நிர்ணயத்தில் கிடைப்பதோடு, பணத்தை செலவு செய்ய யோசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, தங்கள் செலவு செய்யும் பணத்திற்கு ஏற்ப மதிப்பு கொண்ட ஒரு தயாரிப்பாக கிடைக்கிறது.

வடிவமைப்பு மற்றும் டிஸ்ப்ளே:

வடிவமைப்பு மற்றும் டிஸ்ப்ளே:

ரெட்மீ-5 ஃபோனை சியோமி நிறுவனம் உலோகத்தில் உருவாக்கி உள்ளது. இந்த சாதனத்தில் நவீனமான 18:9 என்ற விகிதத்தில் அமைந்த டிஸ்ப்ளே காணப்பட்டு, கையாளுவதற்கு ஒரு பிரிமியம் உணர்வை அளிக்கிறது. ஃபோனின் பின்பக்கத்தை சற்று புடைத்தது போன்ற காட்டுவதாக, பின்பக்கத்தில் உள்ள கேமரா அமைந்து உள்ளது. இந்த கேமரா சென்ஸரின் கீழ் பகுதியில் கைரேகை ஸ்கேனர் அமைந்து உள்ளது. ஃபோனின் வலது பக்கத்தில் ஒலி அளவை கூட்டவும் குறைக்கவும் பயன்படும் பொத்தான்கள் மற்றும் அதே வரிசையில் பவர் ஆன் பொத்தான் ஆகியவை காணப்படுகின்றன. இடது பக்கத்தில் சிம் கார்டுகளுக்கான தட்டு உள்ளது. இந்த ஃபோனின் மேற்பகுதியில் 3.5 மிமீ ஆடியோ ஜேக் உள்ளது.

மைக்ரோயூஎஸ்பி ஸ்லாட்:

மைக்ரோயூஎஸ்பி ஸ்லாட்:

ஃபோனின் கீழ்பகுதியில் உள்ள மைக்ரோயூஎஸ்பி ஸ்லாட் நடுவிலும் அதனுடன் இரட்டை ஸ்பீக்கர்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கு பதிலாக, டைப் சி போர்ட்டை சியாமி நிறுவனம் பயன்படுத்தி இருந்தால், பாராட்டத்தக்கதாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் இந்த ஃபோனை ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, பணிச்சூழலியலுக்கு ஏற்ற விலைக் குறைந்த ஃபோனாக சியாமி ரெட்மீ 5 இருப்பதோடு, பிரிமியம் தோற்றத்தையும் உணர்வையும் அளிக்கிறது. டிஸ்ப்ளே-யை பொறுத்த வரை, இந்த ஃபோனில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்று கீழே காண்போம்.

 தொடுதிரை டிஸ்ப்ளே:

தொடுதிரை டிஸ்ப்ளே:

சியோமி ரெட்மீ 5 இல் ஒரு 5.7 இன்ச் திறன் கொண்ட தொடுதிரை டிஸ்ப்ளே உடன் கூடிய 720 * 1440 பிக்சல் பகுப்பாய்வு திரையை கொண்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் உடன் குறுகிய நேரத்தை நாங்கள் செலவிட்டு பார்த்த போது, இதன் டிஸ்ப்ளே சிறப்பாகவும் தெளிவாகவும் செயல்படுவதை காண முடிந்தது.

சூரியஒளியில் இந்த ஃபோனை பார்த்தால் கூட நன்றாக தெரிகிறது. சூரிய ஒளியில் கூட தெரியும் வகையில் பிரகாசமாக இருப்பதால், இதை பயன்படுத்தும் பயனரின் கண்களுக்கு உளைச்சல் குறைகிறது. இந்த டிஸ்ப்ளே-யின் நிற செறியூட்டல் கூட சமச்சீராக உள்ளதால், இந்த விலை நிர்ணயத்திற்கு தகுந்தாற் போல வீடியோ ப்ளேபேக் மற்றும் கேமிங் ஆகியவற்றிற்கு ஏற்ற டிஸ்ப்ளே காணப்படுகிறது என்று கூற முடியும்.

 கேமரா:

கேமரா:

சியோமி ரெட்மீ 5 உள்ள ஒரு 12 எம்பி முதன்மை கேமரா மூலம் 1080பி வடிவத்தில் 30 எஃப்பிஎஸ் தரத்தில் அமைந்த வீடியோவை பதிவு செய்ய முடியும். இதன் கேமரா அப்ளிகேஷன், ஹெச்டிஆர் முறையைப் பெற்று, சவால் மிகுந்த சூழ்நிலைகளிலும் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. முன்பக்கத்தில் உள்ள

5எம்பி கேமரா மூலம் சுமாரான தரத்தில் அமைந்த செல்ஃபீ படங்களை எடுக்க முடிகிறது. இந்த ஸ்மார்ட்போன் உடன் குறுகிய நேரத்தை நாங்கள்

செலவிட்டு பார்த்த போது, கேமரா செயல்பாட்டில் எந்த விதமான தாமதமும் ஏற்படவில்லை. வரும் நாட்களில், இந்த கேமரா மற்றும் ஃபோனின் செயல்பாட்டை

குறித்த விரிவான மதிப்புரையை நாங்கள் அளிக்க உள்ளோம். எனவே எங்கள் இணையதளத்துடன் இணைந்திருங்கள்.

 செயலி மற்றும் நினைவகம்

செயலி மற்றும் நினைவகம்

சியோமி ரெட்மீ 5-யை, 2 ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் உடன் இணைந்து அட்ரினோ 506 ஜிபியூ இயக்குகிறது. பல்வேறு அப்ளிகேஷன்களை நாங்கள் ஒன்றின் பின் ஒன்றாக இயக்கிய போதும், இந்த ஸ்மார்ட்போன் சிறப்பாக செயல்பட்டது. நாம் அன்றாடம் செய்யும் பன்முக பணிகளுக்கு, 2 ஜிபி ரேம் தாராளமானதாக உள்ளது. 16ஜிபி என்ற நினைவகத்தை, ஒரு மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் 128ஜிபி ஆக விரிவாக்க முடியும். சாஃப்ட்வேர் பகுதியைப் பொறுத்த வரை, ஆன்ட்ராய்டு நெவ்கட் 7.1.2 உடன் நிலையான எம்ஐயூஐ 9 காணப்படுகிறது. இது ஒரு

மேன்மையான அம்சம் என்பதோடு, பெரும்பாலும் எந்த செயல்பாட்டு பிரச்சனைகளும் இல்லாமல் செயல்படுகிறது. இப்போது பெரும்பாலான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களால் விலைக் குறைந்த ஸ்மார்ட்போன்களில் நவீன ஆன்ட்ராய்டு பதிப்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வகையில், இந்த ஃபோனில் ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ பதிப்பை சியோமி நிறுவனம் அளித்து இருக்கலாம் என்று

தோன்றுகிறது.

Xiaomi Redmi Note 5 Pro First Impressions (GIZBOT TAMIL)
பேட்டரி மற்றும் இணைப்பு வசதிகள்:

பேட்டரி மற்றும் இணைப்பு வசதிகள்:

சியோமி ரெட்மீ 5 இல் உள்ள 3,300 எம்ஏஹெச் பேட்டரி, ஒரு நாள் முழுவதும் செய்யும் அடிப்படை பணிகளுக்கு போதுமானதாக உள்ளது. இந்த ஃபோனில் வைஃபை, 802.11 பி/ஜி/என், ஹாட்ஸ்பாட், வி4.0, மைக்ரோயூஎஸ்பி வி2.0 மற்றும் ஏ-ஜிபிஎஸ், குளோனஸ் உள்ளிட்ட இணைப்பு தேர்வுகள் காணப்படுகின்றன.

விலை மற்றும் முடிவு:

விலை மற்றும் முடிவு:

ரூ.7,999 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள சியோமி ரெட்மீ 5, சிறப்பான அம்சங்களின் ஒரு தொகுப்பாக அளிக்கப்படுகிறது. ஏற்றுக் கொள்ளக் கூடிய விலை நிர்ணயம் மற்றும் சியாமியின் சிறந்த அம்சமான எம்ஐயூஐ 9 ஆகியவை சேர்ந்து, ஒரு தகுதியான விலைக் குறைந்த ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும்

வாடிக்கையாளருக்கு ஏற்றதாக அமைகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 5 Another worthy budget smartphone from Xiaomi; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X