Home
Mobile

அறிமுகம்: இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போனின் 4ஜிபி மாறுபாடு.!

சியோமி நிறுவனத்தின் ரெட்மீ 5 ஆனது ஏற்கனவே 2 ஜிபி ரேம் மற்றும் 3 ஜிபி ரேம் வகைகளில் சந்தையில் வாங்க கிடைக்கும் நிலைப்பாட்டில் இப்பொழுது அதன் 4ஜிபி ரேம் பதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

By Muthuraj

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் பட்ஜெட் மற்றும் மிட்-ரேன்ஜ் ஆகிய இரண்டு பிரிவுகளையும் வெளிப்படையாக ஆளும் சியோமி நிறுவனமானது ஏற்கனவே அதன் சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் இரண்டு சேமிப்பு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ள நிலைப்பாட்டில் தற்போது மேலுமொரு சேமிப்பு மாறுபாட்டை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

அறிமுகம்: இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போனின் 4ஜிபி மாறுபாடு.!

அதென்ன மாறுபாடு.? சீனாவில் என்ன விலைக்கு அறிமுகமாகியுள்ளது.? அதே மாறுபாட்டின் இந்திய விலை நிர்ணயம் என்ன.? இந்த புதிய ரெட்மீ 5 மாறுபாட்டின் இந்திய அறிமுகம் எப்போது மற்றும் சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் என்னென்ன என்பதை விரிவாக காண்போம்.

4ஜிபி ரேம் பதிப்பு

4ஜிபி ரேம் பதிப்பு

சியோமி நிறுவனத்தின் ரெட்மீ 5 ஆனது ஏற்கனவே 2 ஜிபி ரேம் மற்றும் 3 ஜிபி ரேம் வகைகளில் சந்தையில் வாங்க கிடைக்கும் நிலைப்பாட்டில் இப்பொழுது அதன் 4ஜிபி ரேம் பதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

தற்போது வரையிலாக சீனாவில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ள இந்த 4ஜிபி ரேம் பதிப்பானது மிக விரைவில் இந்தியாவிலும் வாங்க கிடைக்கும். சீனாவில் சிஎன்ஐ 1099 என்கிற விலைக்கு அறிமுகமாகியுள்ள இக்கருவி இந்தியாவில் ரூ.11,000/- என்கிற விலை புள்ளியின்கீழ் விற்பனைக்கு வரலாம்.

ரெட்மி 5 பிளஸ் உடன்

ரெட்மி 5 பிளஸ் உடன்

ரேம் வேறுபாட்டை தவிர வேறு எந்த மேம்படுத்தல்களையும் சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போன் பெறவில்லை. இந்த புதிய 4ஜிபி ரேம் மாடல் ஆனது பிளாக், ரோஸ் கோல்ட், லைட் ப்ளூ, மற்றும் கோல்ட் ஆகிய வண்ணம் மாறுபாடுகளில் வாங்க கிடைக்கிறது. சீனாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ரெட்மி 5 பிளஸ் உடன் தொடங்கபட்ட இந்த ஸ்மார்ட்போன் ஆனது உத்தியோகபூர்வ சியோமி கடைகளில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

5.7 அங்குல எச்டி+ டிஸ்பிளே

5.7 அங்குல எச்டி+ டிஸ்பிளே

அம்சங்களை பொறுத்தமட்டில், சியோமி ரெட்மீ 5 ஆனது 1440 x 720 பிக்சல்கள் அளவிலான தீர்மானம் கொண்ட ஒரு 5.7 அங்குல எச்டி+ டிஸ்பிளே கொண்டுள்ளது. இது 282 பிபிஐ மற்றும் 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்டது.

16 ஜிபி / 32 ஜிபி

16 ஜிபி / 32 ஜிபி

1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 செயலி மற்றும் அட்ரீனோ 506 ஜிபியூ உடனாக 2ஜிபி/ 3ஜிபி கொண்டு இயங்கும் இக்கருவி முறையே 16 ஜிபி / 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பும் கொண்டுள்ளது. ஒரு 3300எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் சியோமி ரெட்மீ 5 அனைத்து அளவீட்டில் 151.8 x 72.8 x 7.7 மிமீ மற்றும் 157 கிராம் எடையும் கொண்டுள்ளது.

12எம்பி பின்புற கேமரா

12எம்பி பின்புற கேமரா

கேமராத்துறையை பொறுத்தமட்டில், ரெட்மீ 5 ஆனது எப் / 2.2 துலையுடனான 12எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது. இது சிறந்த செயல்திறனை வழங்குவதாகக் கூறப்படுகிறது. முமுன்பக்கம் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 5எம்பி சென்சார் உள்ளது.

மற்றொரு பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போனாக உருவெடுக்கும்

மற்றொரு பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போனாக உருவெடுக்கும்

இரட்டை சிம் ஸ்லாட் மற்றும் ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழங்கும் ரெட்மீ 5 ஆனது ரெட்மீ நோட் 4 போன்றே இந்திய நுகர்வோர்களை பெரிதளவில் கவர்ந்து மற்றொரு பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போனாக உருவெடுக்கும் என்று நம்பப்படுகிறது. பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் ஒன்று பொருத்தப்பட்டுள்ள இந்த சாதனம் ஆண்ட்ராய்டு நௌவ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் மியூஐ 9 கொண்டு இயங்குகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 5 4GB Version Launched. Read more about this in Tamil Gizot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X