அறிமுகம் : 3ஜிபி ரேம், 4100எம்ஏஎச் கொண்ட சியோமி ரெட்மீ 4எக்ஸ்.!
ஆரம்பத்திலேயே அதிரடி காட்டும் 4எக்ஸ் கருவியின் இதர அம்சங்கள் என்னென்ன.?விலை நிர்ணயம் என்ன.? இக்கருவி நமது கைகளில் எப்போது கிடைக்கும்.?
சியோமி கருவிகளுக்கு இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பு மற்றும் ஆதரவுக்கு அக்கருவிகளின் பட்ஜெட்டை விலை மற்றும் ஆப்பிள் கருவி போன்ற வடிவமைப்பு, அருமையான எ,அம்சங்கள் தான் காரணமென்று நான் கூறித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமென்ற அவசியமில்லை.
அதிலும் சியோமி நிறுவனத்தின் ரெட்மீ வரிசை கருவிகளுக்கு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. அவ்வாறாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை சற்று அதிகமாகவே பூர்த்தி செய்யும் வண்ணம் அறிமுகமாகியுள்ளது - ரெட்மீ 4எக்ஸ். 3ஜிபி ரேம், 4100எம்ஏஎச் பேட்டரித்திறன் என ஆரம்பத்திலேயே அதிரடி காட்டும் 4எக்ஸ் கருவியின் இதர அம்சங்கள் என்னென்ன.?விலை நிர்ணயம் என்ன.? இக்கருவி நமது கைகளில் எப்போது கிடைக்கும்.?

ரெட்மீ 4எக்ஸ்
கடந்த ஆண்டு ரெட்மீ 4,ரெட்மீ 4 ப்ரைம், மற்றும் ரெட்மீ 4ஏ ஆகிய ஸ்மார்ட்போன்களை தொடங்கி பிறகு, சியோமி நிறுவனம் இன்று அதன் ரெட்மீ 4 கருவியின் மற்றொரு மாறுபாடான ரெட்மீ 4எக்ஸ் கருவியை அறிமுகம் செய்துள்ளது.

மாறுபாடு
16ஜிபி உள்ளடக்க சேமிப்பு உடனான 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு உடனான 3ஜிபி ரேம் என இரண்டு மாறுபாடுகளில் வெளியாகியுள்ள இக்கருவி தங்கம் மற்றும் கருப்பு வண்ண விருப்பங்களில் மார்ச் மாதத்தில் விற்பனைக்கு வரும்.

டிஸ்ப்ளே, செயலி
720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 அங்குல எச்டி 2.5டி கர்வுடு கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ள 4எக்ஸ் ஆனது அட்ரெனோ 505 ஜிபியூ இணைந்த ஒரு ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 435 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு
மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 128ஜிபி வரை நினைவக விரிவாக்க ஆதரவு வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் எம்ஐயூஐ 8 கொண்ட ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்கும் மற்றும் முன்கூறியபடி ஒரு 4100எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டிருக்கும்.

கேமரா
கேமரா துறையை பொறுத்தமட்டில் ரெட்மீ 4எக்ஸ் எப்/2.0 துளை, 5பி லென்ஸ், பிடிஏஎப், எல்இடி பிளாஷ் கொண்ட 13 எம்பி பின்பக்க கேமரா மற்றும் எப்/2.2 துளை கொண்ட 5 மெகாபிக்சல் செல்பீ/ வீடியோ சாட் கேமரா கொண்டுள்ளது.

இணைப்பு விருப்பங்கள்
கைரேகை ஸ்கேனர், அகச்சிவப்பு சென்சார் கொண்டுள்ள இக்கருவி ஹை-பிரிட் இரட்டை சிம், 4ஜி, எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ், மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகிய இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது உடன் அளவீட்டில் 139.24 × 69.94 × 8.65 மிமீ மற்றும் 150 கிராம் எடையுடையது.

விலை
ரெட்மீ 4எக்ஸ் அக்கருவியின் 16ஜிபி + 2ஜிபி ரேம் மாறுபாடு ரூ.6,792/- என்ற விலை நிர்ணயத்தையும், 32 ஜிபி + 3ஜிபி ரேம் மாறுபாடு ரூ.8,735/- என்ற விலை நிர்ணயத்தையும் பெற்றுள்ளது.

மேலும் படிக்க
ரூ.7,300/-க்கு தெறிக்க விடப்போகும் கேலக்ஸி எஸ்8 (அம்சங்கள், வெளியீடு)


Click it and Unblock the Notifications