இதர ரெட்மீ கருவிகளையே தூக்கி சாப்பிடும் ரெட்மீ 4எக்ஸ் (விலை & அம்சங்கள்).!

|

ரெட்மீ வரிசை கருவிகளை தொடர்ந்து அறிமுகம் செய்து உலக சந்தைகளில் ஆளுமையையும், இந்திய சந்தையில் பெருந்திரளான ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி வைத்துள்ள சியோமி நிறுவனம், சமீப காலமாக பிற போட்டி ஸ்மார்ட்போன்கள் நிறுவன தயாரிப்புகளுடன் போட்டி போடுவதை நிறுத்திக்கொண்டு தந்து கருவிகளுக்கு போட்டியாகவே ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவிலான அம்சங்களை திணித்து அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.

சியோமி நிறுவனம் இந்த ஆண்டு முன்னதாக அதன் ரெட்மீ 4எக்ஸ் கருவியை அதன் சொந்த தயாரிப்பான பைன்கோன் எஸ்1 எஸ்ஓசி மற்றும் மி 5சி ஸ்மார்ட்போன் உடன் அறிமுகப்படுத்தியது. தற்போது ரெட்மீ 4எக்ஸ் வேறொரு புதிய அவதாரம் எடுத்து மே 26-ஆம் தேதி சந்தைக்குள் களம் காணவுள்ளது.

சூப்பர் பட்ஜெட் கருவி

சூப்பர் பட்ஜெட் கருவி

முன்பு வெளியான சூப்பர் பட்ஜெட் கருவியான இதே ரெட்மீ 4 எக்ஸ் ஆனது ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ அடிப்படையிலான மியூஐ (MIUI) 8 கொண்டு இயங்கியது.

7.0 நௌவ்கட் பீட்டா

7.0 நௌவ்கட் பீட்டா

ஆனால் தற்போது வெளியான தகவலின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் பீட்டா இயங்குதளம் கொண்டு வெளியாகும் என்று விவரிக்கிறது.

பீட்டா ரோம் 7.5.18

பீட்டா ரோம் 7.5.18

அதை உறுதிப்படுத்தும் வண்ணம் சியோமி நிறுவனம், மியூஐ (MIUI) உலகளாவிய பீட்டா ரோம் 7.5.18 தனை ரெட்மீ 4எக்ஸ், ரெட்மீ 4, ரெட்மீ 4ஏ, மி மிக்ஸ், மி 5எஸ் உட்பட பல சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு உருட்டப்படும் என்று அறிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

இதன் மூலம் ரெட்மீ 4 எக்ஸ் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் பீட்டா மேம்படுத்தல் பெறும் என்பது கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வமாகி விட்டதை தொடர்ந்து, இந்த மேம்படுத்தல் மே 26 முதல் தொலைபேசியை வந்தடையும் என்றும் கூறப்படுகிறது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

இக்கருவியின் அம்சங்களை பொறுத்தமட்டில் 5 இன்ச் எச்டி 720பி டிஸ்ப்ளே 2.5டி வளைந்த கண்ணாடி கொண்டுள்ளது மேலும் இந்த ஸ்மார்ட்போன் வட்ட முனைகள் கொண்ட மென்மையான உலோக சாஸிஸ் கொண்டுள்ளது.

உயர் இறுதி

உயர் இறுதி

ஸ்னாப் 435 எஸ்ஓசி உடனான 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க சேமிப்பு என்ற ஒரு மாறுபாடும் மறுபக்கம் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு என்ற மாறுபாடுகளில் இக்கருவி கிடைக்கும். மேலும் சமீபத்தில், 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு கொண்ட ஒரு உயர் இறுதியில் மாறுபாடும் தொடங்கப்பட்டது.

விலை

விலை

ஒரு பாரிய 4100எம்ஏஎச் பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் 2 ஜிபி, 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் மாறுபாடுகள் முறையே ரூ.6,500/- ரூ.8,500/- மற்றும் ரூ.10,000/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 4X to get Android 7.0 Nougat MIUI 8 beta on May 26. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X