Home
Mobile

புதிய மாறுபாட்டில், சூப்பர் பட்ஜெட் விலையில் மீண்டுமொரு ரெட்மீ 4ஏ.!

ரெட்மி 4ஏ (3 ஜிபி ரேம் + 32 ஜிபி ப்ளாஷ் மெமரி) என்ற புதிய மாறுபாடு ரூ.6,999/- என்ற விலை டேக் பெற்று, கிட்டத்தட்ட முதலில் வெளியான மாறுபாடு போலவே சூப்பர் பட்ஜெட் சாதனமாக இருப்பது சிறப்பம்சம்.

By Muthuraj

சியோமி நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் அதன் சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போனான ரெட்மீ 4ஏ சாதனத்தை ரூ.5,999/- என்ற விலை நிர்ண்யத்தில் அறிமுகப்படுத்தியது. இப்போது அதே சாதனத்தின் மற்றொரு மாறுபாட்டை அதாவது 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட ஸ்மார்ட்போனை ரூ.6,999/- என்ற விலைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய மாறுபாட்டில், சூப்பர் பட்ஜெட் விலையில் மீண்டுமொரு ரெட்மீ 4ஏ.!

ஆரம்பத்தில், இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள் சேமிப்பு கொண்ட ஒரே ஒரு மாறுபாடு மட்டுமே கொண்டே தொடங்கப்பட்டது. தற்போது அறிமுகமாகியுள்ள இந்த புதிய மாறுபாடு, வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் மி.காம் ப்ளிப்கார்ட், அமேசான், பேடிஎம், டாட்டாகிளிக், மற்றும் மி ஹோம் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

உறுதி

உறுதி

சியோமி துணைத் தலைவரும், சியோமி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான மனு குமார் ஜெயின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் வழியாக ரெட்மி 4ஏ ஸ்மார்ட்போனின் புதிய வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.

விலை டேக்

விலை டேக்

ரெட்மி 4ஏ (3 ஜிபி ரேம் + 32 ஜிபி ப்ளாஷ் மெமரி) என்ற புதிய மாறுபாடு ரூ.6,999/- என்ற விலை டேக் பெற்று, கிட்டத்தட்ட முதலில் வெளியான மாறுபாடு போலவே சூப்பர் பட்ஜெட் சாதனமாக இருப்பது சிறப்பம்சம்.

செயலி

செயலி

சியோமி ரெட்மீ 4ஏ ஸ்மார்ட்போனின் பிரதான அம்சங்களை பொறுத்தமட்டில் இக்கருவி 5 இன்ச், 720 X 1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. உடன் 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 425 செயலி மூலம் அட்ரெனோ 308 ஜிபியூ உடன் இணைந்து செயல்படுகிறது.

இயக்க முறைமை

இயக்க முறைமை

மேற்கூறப்பட்டப்படி 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட இக்கருவி மைக்ரோஎஸ்டி வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவும் வழங்குகிறது. ஒரு 3120எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் இந்த சாதனம் மியூஐ (MIUI) 8-இன் கீழ் மூடப்பட்ட ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயக்க முறைமையில் இயங்குகிறது.

கேமரா

கேமரா

கேமராத்துறைக்குள் நுழைந்தால், ரெட்மீ 4ஏ ஆனது பிடிஏஎப் (PDAF), எல்இடி ஃப்ளாஷ், எப் / 2.2 துளை கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 5 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவுக

இணைப்பு ஆதரவுக

தவிர இந்த ஸ்மார்ட்போன் - ஹைபிரிட் டூயல் சிம், வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் கொண்டுள்ளது. அளவீட்டில் 139.5 x 70.4 x 8.5 மிமீ மற்றும் 131.5 கிராம் எடையுடையதாக உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 4A new variant with 3GB RAM with 32GB storage launched for Rs 6,999. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X