அமேசான் : ரூ.5,999-க்கு கிடைக்கும் சியோமி ரெட்மி 4ஏ.!
இந்த ஸ்மார்ட்போன் பொதுவாக 5.0 அங்குல முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (720-1280) பிக்சல்களின் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த சியோமி ரெட்மி 4ஏ.!
சியோமி நிறுவனம் தற்போது பல ஸ்மார்ட்போன்களின் விலைகளை குறைத்துள்ளது, இதறக்கு முக்கிய காரணம் ஜிஎஸ்டி வரி எனக் கூறப்படுகிறது. சியோமி ரெட்மி 4ஏ என்ற மொபைல் மாடலை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தபோவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை அமேசான் வலைதளம் மூலம் மிக எளிமையாக வாங்க முடியும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்த சியோமி ரெட்மி 4ஏ இன்று (ஜூலை 6) மதியம் 12.00 மணி முதல் மலிவு விலையில் விற்ப்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மக்கள் இந்த ஆபரை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

5.0 அங்குல டிஸ்பிளே:
இந்த ஸ்மார்ட்போன் பொதுவாக 5.0 அங்குல முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (720-1280) பிக்சல்களின் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த சியோமி ரெட்மி 4ஏ.

2ஜிபி ரேம்:
இந்தக்கருவி 2ஜிபி ரேம் கொண்டுள்ளது, மற்றும் 16ஜிபி வரை மெமரி வரை இடம்பெற்றுள்ளது. இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ், போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன்425 :
1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப் டிராகன் 425 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற மொபைல் மாடல்களை விட சிறந்த திறமைப் பெற்றுள்ளது எனக் கூறப்படுகிறது.

பேட்டரி:
சியோமி ரெட்மி 4ஏ பொருத்தவரை 3120எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. மேலும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவருகிறது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இதன் விலை ரூ.5,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








