மோட்டோரோலாவின் மோட்டோ ஈ மாடலுக்கு போட்டியாக சியோமி ரெட்மி 1 எஸ்

By Meganathan
|

இந்திய சந்தைகளில் புதிய நிறுவனம் என்றாலும் தனது முந்தைய மாடலான எம்ஐ3 மூலம் பல வாடிக்கையாளர்களை பெற்றது சியோமி மொபைல்ஸ், எம்ஐ3 மாடலின் விற்பனை இன்றும் நடைபெற்று வரும் நிலையில் அந்நிறுவனம் ரெட்மி 1 எஸ் மாடலை வெளியிட்டுள்ளதோடு சந்தைகளில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

சியோமி ரெட்மி 1 எஸ் மோட்டோரோலாவின் மோட்டோ ஈ மாடலுக்கு போட்டியாக விளங்குவதோடு ப்ளிப்கார்ட் இணையத்திலும் நன்கு விற்பனையாகி வருகின்றது. ரெட்மி 1 எஸ் மோட்டோ ஈ மாடலுடன் ஒப்பிடும் போது விலை மற்றும் சிறப்பம்சங்கள் என அனைத்திலும் சிறந்து விளங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

#!

#!

புதிய சியோமி ரெட்மி 1 எஸ் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸருடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர் கார்டெக்ஸ் ஏ7 கோருடன் அமைக்கப்பட்டுள்ளது.

#2

#2

ரெட்மி 1 எஸ் 1280*720 டிஸ்ப்ளே இருப்பதால் துள்ளியமான போட்டோகளை கொடுக்க முடியும். கூடுதலாக ஐபிஎஸ் தொழில்நுட்பம் பல்வேறு ஆங்கில்களிலும் துள்ளியமான வண்ணங்களை கொடுக்கும்.

#3

#3

1.4 யுஎம் சென்சாருடன் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா மூலம் நீங்கள் துள்ளியமான புகைப்படங்களை எடுக்க முடியும். 1.6 மெகாபிக்சல் கேமராவில் எஹ்டி வீடியோ சாட்டிங்கும் செய்ய முடியும்

#4

#4

அதிநவீன எம்ஐயுஐ இன்டர்பேஸ் ரெட்மி 1 எஸ் மாடலின் கூடுதல் சிறப்பம்சம், 35 மில்லியன் வாடிக்கையாளர்களின் கருத்தை கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதால் விரைவில் இது தொழில்நுட்பம் அனைத்து ஸ்மார்ட் போன்களில் இடம்பெறும் என்றும் நம்பலாம்

#5

#5

ஒலியை பொருத்த வரை ஹை-பை சிஸ்டம் பொருத்தப்பட்டிருப்பதால் அதிக ஒலியை இரைச்சலின்றி ரெட்மி 1 எஸ் கொடுக்கும்

சியோமியின் புதிய ரெட்மி ரூ.5999க்கு விற்பனை செய்யப்பட்டாலும், இதில் 4.7 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி மற்றும் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 400 குவாட்கோர் பிராசஸருடன் 1 ஜிபி ராம் இருப்பதோடு ஆன்டிராய்டு 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் பொருத்தப்பட்டுள்ளது.

கேமராவை பொருத்தவரை 8 எம்பி யும், 1.6 எம்பி முன் பக்க கேமராவும் இதில் உள்ளது. 8 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. டூயல் கேமரா போனான இதில் 3ஜி, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி சப்போர்ட்களுடன் 2000 எம்ஏஎஹ் பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி 1 எஸ் மாடல் வீடியோ பதிவிற்கு இங்கு க்ளிக் செய்யவும்

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 1S 5 Top Features That Make it Worth Your Money

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X