பிளாக்ஷிப் டிசைனுடன் சியோமி ரெட்மி 12 இந்தியாவில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும்!

இந்தியாவின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் ஒன்று அப்கிரேட் ஆகவுள்ளது. மிகவும் பிரபலமான மற்றும் விரும்பப்படும் நம்பர் சீரீஸின் கீழ், சியோமி நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக ரெட்மி 12-ஐ வருகிற ஆகஸ்ட் 1, 2023 அன்று அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. மொபைல் கண்டுபிடிப்புகளின் எல்லைகளை மறுவரையறை செய்யும் இந்த பிராண்ட், ட்விட்டரில் ஒரு வீடியோ வழியாக இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரெட்மி 12 (எதிர்பார்க்கப்படும்) அம்சங்கள்:
சிறந்த கேமரா செட்டப் உடனான பிளாக்ஷிப் லெவல் வடிவமைப்பு!
சியோமியின் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் ஆனது ஒரு அற்புதமான வடிவமைப்பையும், கிரிஸ்டல் பேக் ஃப்ரேமுடன் கூடிய சூப்பர் ஸ்லீக் ப்ரோஃபைலையும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மிகவும் பிரீமியமான தோற்றத்தை அளிக்கும். ரெட்மி 12 ஸ்மார்ட்போன் அதன் பின்புறத்தில் டூயல் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அது போர்ட்ரெய்ட், நைட், 50எம்பி மோட், டைம்-லேப்ஸ் போன்ற பல்வேறு மோட்களையும் வழங்குகிறது. மேலும் செல்பீகளுக்கான 5எம்பி முன்பக்க கேமராவையும் கொண்டுள்ள
ஆழமான ஈடுபாட்டை மறுவரையறை செய்யும் விஷூவல்கள்!
சமீபத்தில் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 12 ஆனது, ஒரு பெரிய துடிப்பான 6.79-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே மூலம் பயனர்களுக்கு நிஜம் போன்ற விஷூவல்கள் மற்றும் தெளிவான வண்ணங்கள் மற்றும் அதிகபட்சமாக 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்குகிறது. நீங்கள் கேமிங் செய்தாலும் சரி அல்லது உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சியை பார்த்தாலும் சரி ரெட்மி 12 ஸ்மார்ட்போன் ஆனது உங்களுக்கு மிகவும் மென்மையான அனுபவத்தை உறுதிசெய்யும்.
தடையற்ற செயல்திறன் ஆனது நீடித்து உழைக்கும் பேட்டரியை சந்திக்கிறது!
உலகளாவிய மாறுபாட்டை போலவே, இந்தியாவிற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரெட்மி 12 ஆனதும் வலிமைமிக்க மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் மூலம் இயக்கப்படும், இது அதிவேகமான மற்றும் தாமதமற்ற செயல்திறனை வழங்குவதற்கும் தடையற்ற மல்டி-டாஸ்கிங்கை வெளிக்கொணருவதற்கும் உதவும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்த ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கக்கூடும். நீங்கள் வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்தாலும் அல்லது சமூக ஊடகங்களில் ப்ரவுஸிங் செய்தாலும், தடையற்ற பயனர் அனுபவத்தை உறுதிசெய்யும் வகையில் ரெட்மி 12 ஆனது உங்களின் அன்றாட தேவைகளை எளிதாக கையாளும் என்று எதிர்பார்க்கலாம்.
மேற்கூறிய விவரங்களானது ஊகங்களை அடிப்படையாக கொண்டது என்பதை நினைவில் கொள்ளவும், மேலும் சியோமி நிறுவனமானது ரெட்மி 12 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி, விலை மற்றும் கூடுதல் தகவல்களை எதிர்காலத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தாலோ அல்லது மேலதிக தகவல்கள் கிடைத்தாலோ அதை உடனே அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications









