Xiaomi ரெட்மி 10X, 10X Pro மற்றும் 10X 4G ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! விலை மற்றும் முழு விபரம்!

|

சியோமி நிறுவனம் சீன சந்தையில் சியோமி ரெட்மி 10X, சியோமி ரெட்மி 10X ப்ரோ மற்றும் சியோமி ரெட்மி 10X 4G ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பிடத்தக்க விஷயங்களில் ஒன்று, ரெட்மி 10 எக்ஸ் 4 ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ G85 ஆல் இயக்கப்படுகிறது, இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹீலியோ G85 சிப்செட் மூலம் சந்தையில் வெளிவந்த முதல் சாதனமாகும்.

சியோமி ரெட்மி 10X மற்றும் 10X ப்ரோ டிஸ்பிளே

சியோமி ரெட்மி 10X மற்றும் 10X ப்ரோ டிஸ்பிளே

ரெட்மி 10X மற்றும் 10X ப்ரோ 5G ஸ்மார்ட்போன்கள், 6.57' இன்ச் சாம்சங் அமோலேட் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவுடன் 2400 × 1800 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் வருகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் 800 நைட்ஸ் பிரைட்னெஸ் உடன் வருகிறது. ரெட்மி 10X 4G ஸ்மார்ட்போன், 6.53' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் உடன் 2400 × 1800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்ப்ளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி 10 எக்ஸ், 10 எக்ஸ் புரோ மற்றும் 10 எக்ஸ் 4ஜி விவரக்குறிப்புகள்

ரெட்மி 10 எக்ஸ், 10 எக்ஸ் புரோ மற்றும் 10 எக்ஸ் 4ஜி விவரக்குறிப்புகள்

ரெட்மி 10 எக்ஸ் மற்றும் 10 எக்ஸ் ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 5ஜி ஆதரவு உண்டு, இதனால் இந்த ஸ்மார்ட்போன்களில் டூயல் 5ஜி சிம் ஸ்லாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சியோமி ரெட்மி 10 எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் அதன் பெயர் குறிப்பிடுவது போல 4ஜி சிம் கார்டுகளுக்கு மட்டுமே ஆதரவு அளிக்கிறது. ரெட்மி 10 எக்ஸ் மற்றும் 10 எக்ஸ் ப்ரோ இரண்டும் மீடியாடெக் டைமன்சிட்டி 820 5ஜி சிப்செட்டால் இயக்கப்படுகின்றன.

4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல!4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல!

பெஞ்ச்மார்க் மதிப்பெண் எவ்வளவு?

பெஞ்ச்மார்க் மதிப்பெண் எவ்வளவு?

சியோமி அதன் ரெட்மி 10 எக்ஸ் மற்றும் ரெட்மி 10 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கான சிப்செட்களை சிறப்பாகத் தனிப்பயனாக்க மீடியா டெக் உடன் இணைந்து பணியாற்றியதுடன், ஸ்மார்ட்போன்கள் அன்ட்டு பெஞ்ச்மார்க்கில் 415,672 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரெட்மி 10 எக்ஸ் மற்றும் ரெட்மி 10 எக்ஸ் ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் 8 ஜிபி LPDDR4X ரேம் உடன் வருகிறது.

ஸ்டோரேஜ்

ஸ்டோரேஜ்

இந்த புதிய ஸ்மார்ட்போன்களின் ஸ்டோரேஜ் வேரியண்ட் தகவலைப் பொறுத்த வரையில், 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என்ற இரண்டு சேமிப்பு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெட்மி 10 எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன், 4 ஜிபி மற்றும் 6 ஜிபி என்ற இரண்டு ரேம் வகைகளில் வருகிறது. அடுத்தபடியாக, இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் கேமரா அம்சங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

சியோமி ரெட்மி 10 எக்ஸ் கேமரா

சியோமி ரெட்மி 10 எக்ஸ் கேமரா

சியோமி ரெட்மி 10 எக்ஸ் ஸ்மார்ட்போன், டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமராவுடன், 8 மெகா பிக்சல் கொண்ட வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமராவை கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 16 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி 10 எக்ஸ் ப்ரோ கேமரா

சியோமி ரெட்மி 10 எக்ஸ் ப்ரோ கேமரா

சியோமி ரெட்மி 10 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன், குவாட்-கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமராவுடன், 8 மெகா பிக்சல் கொண்ட 30 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் சப்போர்ட் லென்ஸ் கேமராவுடன், 5 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் கொண்ட வைட்-ஆங்கிள் கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 32-இன்ச், 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! விலை இவ்வளவு தான்!இந்தியாவில் 32-இன்ச், 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! விலை இவ்வளவு தான்!

சியோமி ரெட்மி 10 எக்ஸ் சீரிஸ் பேட்டரி

சியோமி ரெட்மி 10 எக்ஸ் சீரிஸ் பேட்டரி

சியோமி ரெட்மி 10 எக்ஸ், 10 எக்ஸ் ப்ரோ மற்றும் 10 எக்ஸ் 4ஜி ஆகிய அனைத்தும் அண்ட்ராய்டு 10 உடன் கூடிய MIUI 12 இயங்குதளத்தில் இயங்குகிறது. சியோமி ரெட்மி 10 எக்ஸ் மற்றும் 10 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் 4,250 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இதில் 10 எக்ஸ் மாடல் 22.5W ஃபாஸ்ட் சார்ஜ் மற்றும் 10 எக்ஸ் ப்ரோ மாடல் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. அதேபோல், ரெட்மி 10 எக்ஸ் 4ஜி மாடல், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,020 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.

சியோமி ரெட்மி 10 எக்ஸ் விலை

சியோமி ரெட்மி 10 எக்ஸ் விலை

  • 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.16,956 என்ற விலை வருகிறது.
  • 6ஜிபி + 128ஜிபி வேரியண்ட் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.19,076 என்ற விலை வருகிறது.
  • 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.22,255 என்ற விலை வருகிறது.
  • 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.25,435 என்ற விலை வருகிறது.
  • சியோமி 10 எக்ஸ் ப்ரோ விலை

    சியோமி 10 எக்ஸ் ப்ரோ விலை

    • 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.25,435 என்ற விலை வருகிறது.
    • 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.27,554 என்ற விலை வருகிறது.
    • சியோமி ரெட்மி 10 எக்ஸ் மற்றும் சியோமி 10 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கோல்ட், ப்ளூ மற்றும் வயலட் ஆகிய முந்திரி நிறங்களில் விற்பனையாகு ஜூன் மாதம் முதல் வரம் முதல் கிடைக்கிறது.
    • சியோமி 10 எக்ஸ் 4ஜி விலை

      சியோமி 10 எக்ஸ் 4ஜி விலை

      4 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.10,598 என்ற விலை வருகிறது.
      6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.12,717 என்ற விலை வருகிறது.
      சியோமி 10 எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் ப்ளூ, வயலட் மற்றும் கிறீன் நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த மூன்று மாடல்களும் இந்தியச் சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 10X, 10X Pro, and 10X 4G Price And Specifications : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X