இன்று 12 மணிக்கு "போக்கோ எப்1" பிளிப்கார்ட் வழியே அறிமுகம்.!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், இந்த புதிய பிராண்டின் முதல் மொபைலாக போக்கோ எப்1 இன்று மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் இல் அறிமுகம் துவங்குகிறது.

By Sharath
|

சியோமி நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்துவருகிறது. தனது தயாரிப்புகள் ஒவ்வொன்றிலும் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றும் சியோமி நிறுவனம், தற்பொழுது அதனுடைய புதிய ஸ்மார்ட்போன் பிராண்ட் "போக்கோ"வை சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்தது.

இன்று 12 மணிக்கு

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், இந்த புதிய பிராண்டின் முதல் மொபைலாக போக்கோ எப்1 இன்று மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் இல் அறிமுகம் துவங்குகிறது. சியோமி நிறுவனத்தின் இந்த புதிய பிராண்ட் போக்கோ எப்1 ஸ்மார்ட்போன், வேகத்தின் அசுரன் மற்றும் சிறந்த ஆற்றல் கொண்டவன் என்று சியோமி நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.

பிரத்தியேக விளம்பரம்

பிரத்தியேக விளம்பரம்

இந்த போக்கோ ஸ்மார்ட்போன் துவக்க விற்பனையைப் பட்டையைக்கிளப்ப சியோமி நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. பிளிப்கார்ட் நிறுவனம் போக்கோ எப்1 ஸ்மார்ட்போன் துவக்க விற்பனைக்காகவே அதன் வலைத்தளத்தில் பிரத்தியேக தனி விளம்பர இடத்தை வழங்கியுள்ளது. இந்த விளம்பர இடத்தில் இரண்டு வீடியோக்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது, அதில் பி.வி.சிந்து மற்றும் டூட்டி சந்த் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் ஒரே ஸ்மார்ட்போன் போக்கோ எப்1 என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்கோ எப்1 ஹேஷ் டேக்

போக்கோ எப்1 ஹேஷ் டேக்

#AsFastAsYou என்ற ஹேஷ் டேக் உடன் இந்த விளம்பரம் வருகிறது. உங்கள் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் ஸ்மார்ட்போன் போக்கோ எப்1 மட்டுமே என்று சியோமி வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது. சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொருமுறையும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வெற்றியடைந்து வருகிறது. இந்த வரிசையில் போக்கோ எப்1 என்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறதென்பது விரைவில் தெரியும்.

அதிரடி அறிமுகம்

அதிரடி அறிமுகம்

இந்த ஆண்டில் வெளிவந்த சியோமி இன் ரெட்மி நோட் 5 மற்றும் நோட் 5 ப்ரோ விற்பனையில் களைக்கட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில் தனது அடுத்த புது ரக ஸ்மார்ட்போன் ஐ அதிரடி அறிமுகம் செய்கிறது சியோமி நிறுவனம். நிச்சயம் போக்கோ எப்1 புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லீக்குய்ட் கூல் தொழில்நுட்பம்

லீக்குய்ட் கூல் தொழில்நுட்பம்

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் செயற்கை நுண்ணறிவு அம்சம் மற்றும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவருகிறது. இத்துடன் பிரேத்தியேக சேவையாக புதிய லீக்குய்ட் கூல் தொழில்நுட்பம் போக்கோ எப்1 ஸ்மார்ட்போன் இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி போக்கோ எப்1 விபரக்குறிப்பு:

சியோமி போக்கோ எப்1 விபரக்குறிப்பு:

- 6.18 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் கூடிய 18:7:9 திரைவிகிதம் கொண்ட தொடுதிரை
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி
- கூடுதல் மெமரி நீட்டிப்பு வசதி
- 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 20எம்பி செல்பீ கேமரா
- 4000எம்ஏஎச் பேட்டரி

போக்கோ போன் எப்1 இன்று அறிமுகம்

போக்கோ போன் எப்1 இன்று அறிமுகம்

இத்துடன் வைப்பை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டு சியோமி போக்கோ போன் எப்1 இன்று அறிமுகம் செய்யப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.25,000 இல் இருந்து துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi POCO F1 will be unveiled tomorrow as a Flipkart exclusive product : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X