ஆகஸ்ட் 22: மிகவும் எதிர்பார்த்த சியோமி போகோபோன் எப்1 சாதனம் அறிமுகம்(அம்சங்கள்).!
சியோமி போகோ எப்1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.18-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும்.

சியோமி நிறுவனம் தொடர்ந்து இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, கடந்த வாரம் கூட சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது அந்நிறுவனம். இப்போது அந்நிறுவனம் சார்பில்
புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
சியோமி போகோ எப்1 மாடலை வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி அறிமுகம் செய்ய தயராக உள்ளது அந்நிறுவனம். போகோ எப்1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் மற்றும செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல்வேறு அம்சங்களை
கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சியோமி போகோ எப்1:
சியோமி போகோ எப்1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.18-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், அதன்பின்பு 18:7:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்கங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்:
இக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சேமிப்பு:
சியோமி போகோபோன் எப்1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு 20எம்பி செல்பீ கேமரா இதில் பொறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எல்இடி பிளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இணைப்பு ஆதரவுகள் :
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டு சியோமி போகோபோன் எப்1 சாதனம் வெளிவரும்.

விலை:
குறிப்பாக 4000எம்ஏஎச் பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல், மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலைப் பொறுத்தவரை ரூ.33,300-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications