அக்டோபர் 13: ரூ.20,999 விலையில் ஆஃப்லைனில் விற்பனைக்கு போகோ எப்1.!
இந்த ஸ்மார்ட்போன் 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 20எம்பி செல்பீ கேமரா ஆதரவு மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் உள்ளது.
சியோமி நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் அக்டோபர் 13-ம் (இன்று) தேதி ஆஃப்லைனில் விற்பனைக்கு கொண்டுவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் உலக நாடுகள் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக சியோமி போகோ எப்1 ஸ்மார்ட்போன் சியோமியின் அதிகாரப்பூர்வ மி ஹோம் ஸ்டோர்களில் கிடைக்கிறது, பின்பு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போகோ பிராண்டு இந்தியர்கள் மத்தியில் பிரபலப்படுத்த சியோமி நிறுவனம் முடிவு
செய்துள்ளது. மேலும் சியோமி போகோ எப்1 ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
இக்கருவி 6.18-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2246x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு:
போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போன் 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 20எம்பி செல்பீ கேமரா ஆதரவு மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் உள்ளது. குறிப்பாக கைரேகை சென்சார், ஐ.ஆர் பேஸ் அன்லாக் போன்ற அம்சங்களும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்ப 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன்
வெளிவந்துள்ளது.

விலை:
6ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட போகோ எப்1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,999-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட போகோ எப்1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.23,999-ஆக உள்ளது. 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட போகோ எப்1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.28,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications