6ஜிபி ரேம், 128ஜிபி மெமரியுடன் போகோ எப்1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
குறிப்பாக இந்த ஆர்மர்டு எடிஷன் வேரியன்ட் சாதனத்தில் பேக் பேனல் மற்றும் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்சமயம் போகோ எப்1 ஆர்மர்டு எடிஷன் வேரியன்ட் ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டுள்ளது சியோமி நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது.

பின்பு போகோ எப்1 ஆர்மர்டு எடிஷன் வேரியன்ட் ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று முதல் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஆர்மர்டு எடிஷன் வேரியன்ட் சாதனத்தில் பேக் பேனல் மற்றும் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. மேலும் போகோ எப்1 சாதனத்தின் பல்வேறு சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
இக்கருவி 6.18-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2246x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு:
போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போன் 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 20எம்பி செல்பீ கேமரா ஆதரவு மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் உள்ளது. குறிப்பாக கைரேகை சென்சார், ஐ.ஆர் பேஸ் அன்லாக் போன்ற அம்சங்களும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்ப 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன்
வெளிவந்துள்ளது.

விலை:
போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ.23,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
6ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட போகோ எப்1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட போகோ எப்1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.28,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications