DSLR கேமராவையே தூக்கி சாப்பிடும் Xiaomi போன்: பணம் சம்பாதிக்க ஆசை இருந்தா இதை வாங்குங்க!

|

Xiaomi நிறுவனம் Xiaomi 12S அல்ட்ரா கான்செப்ட் ஸ்மார்ட்போனை DSLR கேமராவைப் போல் மாற்றிக் கொள்ளும் வகையிலான லென்ஸ் உடன் காட்சிப்படுத்தியுள்ளது. சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன சியோமி, லைகா உடன் இணைந்து உருவாக்கிய ஸ்மார்ட்போனின் முழுமையான வடிவமைப்பு மற்றும் ஆப்டிகல் விவரங்கள் குறித்து டீஸ் செய்திருக்கிறது. புதிய Xiaomi 12S அல்ட்ரா கான்செப்ட் ஸ்மார்ட்போன் ஆனது அதன் கேமராவுடன் கூடுதலாக பெரிய லென்ஸை இணைக்க அனுமதிக்கிறது.

லைகாவின் எம்-சீரிஸ் லென்ஸ்களை இணைக்கலாம்

லைகாவின் எம்-சீரிஸ் லென்ஸ்களை இணைக்கலாம்

லைகாவின் எம்-சீரிஸ் கேமரா லென்ஸ்களை ஸ்மார்ட்போனின் கேமரா உடன் இணைக்க முடியும் என சியோமி தெரிவித்துள்ளது. Xiaomi 12S அல்ட்ரா கான்செப்ட் எடிஷன் ஸ்மார்ட்போனில் Xiaomi 12S அல்ட்ரா ஸ்மார்ட்போனில் உள்ள சென்சார்களை போல் இல்லாமல் இரண்டு 1 இன்ச் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதலாக பொருத்தக்கூடிய லென்ஸ்கள் உடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வமாக அறிவித்த சியோமி

அதிகாரப்பூர்வமாக அறிவித்த சியோமி

Xiaomi நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ Weibo தளத்தின் மூலமாக Xiaomi 12S அல்ட்ரா கான்செப்ட் ஸ்மார்ட்போன் குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. Xiaomi மற்றும் Leica இணைந்து இந்த புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. Leica M-சீரிஸ் லென்ஸை இந்த ஸ்மார்ட்போன் உடன் இணைக்கலாம்.

துல்லிய பாதுகாப்புடன் Xiaomi 12S அல்ட்ரா கான்செப்ட்

துல்லிய பாதுகாப்புடன் Xiaomi 12S அல்ட்ரா கான்செப்ட்

Xiaomi 12S அல்ட்ரா கான்செப்ட் ஸ்மார்ட்போனானது இரண்டு 1 இன்ச் சென்சார்களைக் கொண்டிருக்கிறது. மேலும் தரம் வாய்ந்த கூர்மையான புகைப்படங்களை எடுப்பதற்கு கூடுதல் லென்ஸ்களை பயன்படுத்திக் கொள்ளலாம். கேமராவின் மேல் லென்ஸ்கள் பொருத்தப்படுகிறது எனவே கேமராவின் மேற்புற கிளாஸ்களை கீறல்களில் இருந்து பாதுகாக்க சபையர் கிளாஸ் பூச்சு செய்யப்பட்டிருக்கிறது.

Xiaomi 12S அல்ட்ரா கான்செப்ட் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கூடுதல் அம்சங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. நிறுவனம் விரைவில் இதுகுறித்த கூடுதல் டீஸர்களையும் அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samsung, Apple, Vivo, OnePlus போன்களுக்கு போட்டி

Samsung, Apple, Vivo, OnePlus போன்களுக்கு போட்டி

சியோமி நிறுவனத்தின் முதன்மை தர ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்புகள், ப்ரீமியம் கேமரா அனுபவம் மற்றும் தடையில்லா செயல்திறன் என பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது. வரவிருக்கும் சியோமி ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனானது கேமராவை மையமாகக் கொண்டு வெளியாகும் Samsung, Apple, Vivo, OnePlus போன்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

இந்த சியோமி 12எஸ் அல்ட்ரா கான்செப்ட் பதிப்பு சீனாவில் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அல்ட்ரா கான்செப்ட் எடிஷன் ஸ்மார்ட்போன் பிற நாடுகளின் சந்தைகளில் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நீங்கள் சமூகவலைதளங்களில் புகழ்பெற்றவராகவோ அல்லது புகழ் பெற விரும்புபவராக இருந்தால் இந்த போன் சிறந்த தேர்வாக இருக்கும். காரணம் இதில் துல்லியமான மற்றும் மேம்பட்ட வீடியோக்களை பதிவு செய்து அப்லோட் செய்யலாம். யூடியூப் இல் வீடியோ பதிவிட்டு வருமானம் ஈட்டுவதற்கும் இந்த போன் பேருதவியாக இருக்கும்.

பிரத்யேக ஸ்மார்ட்போனாக அறிவிப்பு

பிரத்யேக ஸ்மார்ட்போனாக அறிவிப்பு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சியோமி 12எஸ் அல்ட்ரா ஸ்மார்ட்போன் கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இது சியோமி 12S தொடரின் ப்ரீமியம் மாடலாகும். இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மேம்பட்ட வகையில் இருக்கிறது. இதன் விலையும் ஐபோனுக்கு இணையாக இருக்கிறது. இந்த மாடலின் பிரத்யேக பதிப்பாக தான் சியோமி 12 எஸ் அல்ட்ரா கான்செப்ட் வெளியாக இருக்கிறது.

ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்

Xiaomi 12S Ultra ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி வசதியோடு வெளியானது. சியோமி 12எஸ் அல்ட்ரா ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே குறித்து பார்க்கையில், இது 6.73 இன்ச் LTPO 2.0 AMOLED டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது.

8K வீடியோ பதிவு ஆதரவு

8K வீடியோ பதிவு ஆதரவு

Xiaomi 12S Ultra ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களில் ஒன்று அதன் கேமராக்கள் ஆகும். இதன் முதன்மை கேமரா சோனியின் IMX989 லென்ஸை கொண்டிருக்கிறது. IMX989 என்பது 1-இன்ச் சென்சார் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் முதன்மை கேமரா மெகாபிக்சல் 50MP ஆகும். டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இதில் இருக்கிறது.

இரண்டாம் நிலை கேமரா குறித்து பார்க்கையில், இதில் 48MP அல்ட்ரா-வைட் லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மூன்றாம் நிலை கேமராவாக 48MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆதரவு இருக்கிறது.

அதேபோல் இதன் பிரதான கேமரா HyperOIS அம்சம் மற்றும் 8K வீடியோ பதிவுக்கான ஆதரவை கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Xiaomi 12S Ultra விலை என்ன?

Xiaomi 12S Ultra விலை என்ன?

Xiaomi 12S Ultra ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை CNY 5,999 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு ரூ.70,739 ஆகும். அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 6,999 ஆக இருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு ரூ.82,539 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் க்ரீன் வண்ண விருப்பத்தில் வெளியாகி உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi phone surpasses DSLR camera: Tough competition to Samsung, Apple, Vivo phone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X