களத்தில் Xiaomi வந்தா என்ன செய்வீங்க?- தலை சுத்த வைக்கும் விலையில் புது ஸ்மார்ட்போன்!

|

சாம்சங் நிறுவனம் Samsung Galaxy Z Fold4 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த நிலையில் தற்போது சியோமி அதே ஃபோல்ட் பிரிவில் ஒரு ஸ்மார்ட்போனை களமிறக்கி இருக்கிறது. சியோமி நிறுவனம் அறிவித்துள்ள புதிய ஃபோல்ட் ஸ்மார்ட்போன் விலை தலை சுத்த வைக்கும் விதத்தில் இருக்கிறது. வாங்க இந்த ஸ்மார்ட்போனின் தகவலை விரிவாக பார்க்கலாம்.

Mix Fold 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்

Mix Fold 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்

சீனாவில் நடைபெற்ற Xiaomi நிகழ்வில் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான Mix Fold 2 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட Xiaomi Mix Fold இன் வாரிசாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

மேம்பட்ட ஆதரவுகளுடன் புது ஸ்மார்ட்போன்

மேம்பட்ட ஆதரவுகளுடன் புது ஸ்மார்ட்போன்

முன்னதாக அறிமுகமான ஃபோல்ட் ஸ்மார்ட்போனை விட Mix Fold 2 பல மேம்பட்ட ஆதரவுகளை கொண்டுள்ளது. லைகா தொழில்நுட்ப கேமராக்கள், சமீபத்திய முதன்மை SoC உடன் மெலிதான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

மிகவும் மெலிதான வடிவமைப்பு

மிகவும் மெலிதான வடிவமைப்பு

Xiaomi Mix Fold 2 ஸ்மார்ட்போனானது சந்தையில் இருக்கும் ஃப்ளாக்ஷிப் விலைப் பிரிவு ஸ்மார்ட்போனுகளுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன் மிகவும் மெலிதான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அலாய் மற்றும் கார்பன் ஃபைபர் பிளேட் உள்ளிட்டவைகள் மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Mix Fold 2 ஆனது அதன் முந்தைய ஸ்மார்ட்போனை விட மாறுபட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

8 இன்ச் 2k டிஸ்ப்ளே

8 இன்ச் 2k டிஸ்ப்ளே

Mix Fold 2 ஸ்மார்ட்போனானது ஸ்போர்ட்ஸ் 8 இன்ச் 2k டிஸ்ப்ளே, லைகா பவர்டு கேமராக்கள், 8.02 இன்ச் இன்டெர்னல் டிஸ்ப்ளே, 2,160 x 1,914 பிக்சல்கள் தீர்மானத்தைக் கொண்டிருக்கிறது.

ஸ்மார்ட்போன் 2K டிஸ்ப்ளே OLED பேனலைக் கொண்டுள்ளது.

அதோடு 120Hz ரெஃப்ரஷிங் ரேட், 1400 நிட்ஸ் பிரகாசம், டால்பி விஷன் மற்றும் HDR10+ ஆதரவும் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது.

Mix Fold 2 ஆனது 6.56 இன்ச் முழு HD+ Samsung E5 AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. Gorilla Glass Victus பாதுகாப்பு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

Mix Fold 2 ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

இது 12 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளியாகி இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

அதோடு ஹை ரெஸ் ஆடியோ, டூயல் ஸ்பீக்கர்கள், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இருக்கிறது.

அதேபோல் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Xiaomi Mix Fold 2 ஸ்மார்ட்போனின் கேமரா

Xiaomi Mix Fold 2 ஸ்மார்ட்போனின் கேமரா

Xiaomi Mix Fold 2 ஸ்மார்ட்போனில் கேமரா அம்சங்கள் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது. அதாவது இதில் Sony IMX766 சென்சார் மற்றும் OIS உடனான 50MP முதன்மை கேமரா, 13MP வைட் ஆங்கிள் லென்ஸ், 8MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங்குடன் லைக்கா ஆப்டிக்ஸ் ஆகிய ஆதரவுகளை கொண்டிருக்கிறது.

20MP செல்பி கேமரா

20MP செல்பி கேமரா

ஸ்மார்ட்போனின் வெளிப்புற காட்சியின் மேற்புறத்தில் 20MP செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை ஓபன் செய்தால் அதன் உட்புறத்தில் கேமரா எதுவும் இல்லை.

Xiaomi Mix Fold 2 விலை, கிடைக்கும் தன்மை

Xiaomi Mix Fold 2 விலை, கிடைக்கும் தன்மை

Xiaomi Mix Fold 2 விலை, கிடைக்கும் தன்மை குறித்த விவரங்களை பார்க்கலாம். சியோமி மிக்ஸ் ஃபோல்ட் 2 ஸ்மார்ட்போனானது 12GB + 256GB, 12GB + 512GB மற்றும் 12GB + 1TB என்ற மூன்று வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.1,06,300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.1,18,000 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.1,41,600 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ஆகஸ்ட் 16 முதல் விற்பனை

ஆகஸ்ட் 16 முதல் விற்பனை

Xiaomi Mix Fold 2 ஸ்மார்ட்போனானது ப்ளாக் மற்றும் கோல்ட் கவர் தோற்றத்தில் சீனாவில் முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கிறது.

ஆகஸ்ட் 16 முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உலகளாவிய அறிமுகம் குறித்த எந்த விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை.

Best Mobiles in India

English summary
xiaomi Mix Fold 2 announced Official: Flagship Soc, Leica Powered Cameras and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X