Home
Mobile

யாரு சாமி நீ? இப்படி ஒரு போனை மார்க்கெட்ல எறக்கியிருக்க? கண்ணை பறிக்கும் டிஸ்பிளேவுடன் புது Xiaomi பிலிப் போன்

சியோமி (Xiaomi) நிறுவனம் இன்று அதன் புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. சியோமி நிறுவனம் அதன் புதிய சியோமி 14T (Xiaomi 14T) மற்றும் சியோமி மிக்ஸ் பிலிப் (Xiaomi MIX Flip) ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் சியோமி 14T வழக்கமான ஸ்மார்ட்போன் சாதனமாகவும், சியோமி மிக்ஸ் பிலிப் என்ற பிலிப் ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சியோமி மிக்ஸ் பிலிப் சாதனத்தின் விலை மற்றும் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த புதிய சியோமி மிக்ஸ் பிலிப் (Xiaomi MIX Flip) ஸ்மார்ட்போன் சாதனம் இரண்டு டிஸ்பிளேவை கொண்ட பிலிப் மாடல் ஸ்மார்ட்போன் சாதனமாக வெளிவந்துள்ளது. இதன் உள்பக்க டிஸ்பிளே (Internal display) 6.86" இன்ச் அளவு கொண்ட 2912 x1224 பிக்சல் உடன் 1.5K கிரிஸ்டல் ரெஸ் 1Hz முதல் 120Hz வரையிலான ரெஃப்ரஷ் ரேட்டை (Refresh rate) ஆதரிக்கும் LTPO டிஸ்பிளேவை கொண்டிருக்கிறது.

யாரு சாமி நீ? இப்படி ஒரு போனை மார்க்கெட்ல எறக்கியிருக்க? Xiaomi பிலிப்

யாரு சாமி நீ? இப்படி ஒரு போனை மார்க்கெட்ல எறக்கியிருக்க? கண்ணை பறிக்கும் டிஸ்பிளேவு:

இது 2160Hz PWM டிம்மிங், DC டிம்மிங், 3000 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் போன்றவற்றை கொண்டுள்ளது. இது HDR 10+, டால்பி விஷன், UTG கிளாஸ் பாதுகாப்பு போன்ற ஆதரவை வழங்குகிறது. இந்த போனின் வெளிப்புறத்தில் உள்ள டிஸ்பிளே 4 இன்ச் அளவுடன் 1392×1280 பிக்சல் 1.5K கிரிஸ்டல் ரெஸ், 120Hz ரெஃப்ரஷ் ரேட், 2160Hz PWM டிம்மிங், போன்ற அணைத்து உள்பக்க டிஸ்பிளே ஆதரவை வெளிப்புற டிஸ்பிளேவும் கொண்டுள்ளது.

இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட் உடன் 12GB LPPDDR5X ரேம் (RAM) உடன் 512GB UFS 4.0 ஸ்டோரேஜ் (storage) வருகிறது. இது ஆண்ட்ராய்டு 14 உடன் சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS based on Android 14) உடன் வருகிறது. இது டூயல் நானோ சிம் ஆதரவுடன் வருகிறது.

இந்த புதிய சியோமி மிக்ஸ் பிலிப் (Xiaomi MIX Flip) ஸ்மார்ட்போன் சாதனம் 50MP OIS உடன் 50MP 2x டெலிபோட்டோ கேமராவுடன் வருகிறது. இது 32MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இது USB Type-C audio, Hi-Res audio, டூயல் speakers ஆதரவுடன் வருகிறது.

சியோமி மிக்ஸ் பிலிப் (Xiaomi MIX Flip):

இது 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 6E 802.11 ax, Bluetooth 5.4,B1I + B1C+ B2a|GPS: L1 + L5|Galileo: E1 + E5a, GLONASS:G1|QZSS: L1 + L5|NavIC: L5, USB Type-C 2 Gen 1, NFC, போன்ற ஆதரவுகளை வழங்குகிறது. இது 4780mAh பேட்டரி உடன் 67W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை (fast charging) கொண்டுள்ளது.

சியோமி மிக்ஸ் பிலிப் (Xiaomi MIX Flip) ஸ்மார்ட்போன் சாதனம் இந்திய மதிப்பில் ரூ. 1,21,055 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிய சியோமி பிலிப் ஸ்மார்ட்போன் (Xiaomi Flip Smartphone) தற்போது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi MIX Flip With Dual Display Launched Check Price and Storage
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X