Home
Mobile

Xiaomi MIX Flip வேற ரகம்.. 6.86 இன்ச் மெயின் டிஸ்பிளே.. 4 இன்ச் அவுட்டர் பேனல்.. 50MP டெலிபோட்டோ.. எந்த மாடல்?

பிளிப் போன் மார்கெட் அதிரும்படி 6.86 இன்ச் மெயின் டிஸ்பிளே, 4 இன்ச் செகண்டரி டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், லைய்கா சம்மிலக்ஸ் லென்ஸ் கொண்ட 50 எம்பி டெலிபோட்டோ கேமரா, ஓம்னிவிஷன் சென்சார் கொண்ட 32 எம்பி செல்பீ ஷூட்டர், 67W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4780mAh பேட்டரி போன்ற ஒட்டுமொத்த பிரீமியம் பீச்சர்களுடன் சியோமி மிக்ஸ் ஃபிளிப் (Xiaomi MIX Flip) போன் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சியோமி மிக்ஸ் ஃபிளிப் அம்சங்கள் (Xiaomi MIX Flip Specifications): இந்த ஃபிளிப் போனில் 6.86 இன்ச் (2912 x1224 பிக்சல்கள்) மெயின் டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 1.5K ரெசொலூஷன் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மடாலாகும். இந்த டிஸ்பிளேவில் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, டிசி டிம்மிங், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) வருகிறது.

தலைவன் வேற ரகம்.. 6.86 இன்ச் மெயின் டிஸ்பிளே.. 4 இன்ச் அவுட்டர் பேனல்!

மேலும், டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் யுடிஜி கிளாஸ் புரொடெக்சன் (UTG Glass Protection) வருகிறது. அதேபோல 1.5K ரெசொலூஷன் மற்றும் 3000 பீக் பிரைட்னஸ் கொண்ட 4 இன்ச் (1392×1280 பிக்சல்கள்) அவுட்டர் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவிலும் அமோலெட் பேனல், 2160Hz PWM டிம்மிங், எச்டிஆர்10பிளஸ் மற்றும் டால்பி விஷன் வருகிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு சியோமி சீல்டு கிளாஸ் புரொடெக்சன் (Xiaomi Shield Glass Protection) வருகிறது. சியோமி ஹைபர்ஓஎஸ் பேஸ்டு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வருகிறது. இந்த சியோமி மிக்ஸ் ஃபிளிப் மாடலில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் வருகிறது.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. லைட் ப்ளூஷன் 800 (Light Fusion 800) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓம்னிவிஷன் ஓவி60ஏ30 (OmniVision OV60A40) 50 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் மேக்ரோ ஷூட்டிங் மற்றும் லைய்கா சம்மிலக்ஸ் லென்ஸ் (Leica Summilux Lens) வருகிறது. 8K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. ஓம்னிவிஷன் ஓவி32பி (OmniVision OV32B) சென்சாருடன் 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

ஸ்லிம் டிசைன் கொண்டிருப்பதால், 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 4780mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி உடன் 7.8 மிமீ தடிமன் மற்றும் 192 கிராம் எடை வருகிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், இன்பிராரெட் சென்சார், டைப்-சி போர்ட், ஹை-ரெஸ் ஆடியோ மற்றும் டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) வருகின்றன.

ஒயிட், பிளாக் மற்றும் பர்பிள் கலர் கொண்டிருக்கிறது. மேலும், சியோமி நைலான் ஃபைபர் ஸ்பெஷல் எடிஷனும் வருகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 69,085ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.74,845ஆகவும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி மாடலின் விலை ரூ.84,060ஆகவும் இருக்கிறது.

இப்போது, சீன மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. வரும் ஜூலை 23ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. இதே விலையில் இந்தியா உள்பட மற்ற நாடுகளில் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த ஃபிளிப் மாடல் மட்டுமல்லால், சியோமி மிக்ஸ் போல்டு 4, சியோமி ஸ்மார்ட் பேண்ட் 9 போன்ற ப்ராடக்ட்களும் சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi MIX Flip With 12GB RAM, 50MP Camera Launched Sale From July 23 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X