Home
Mobile

செஞ்சி விட்ட சீன கம்பெனி.. Samsung, Moto-வை விட ரூ.27000 கம்மி.. மாஸ் என்ட்ரி கொடுக்கும் Xiaomi MIX Flip போன்!

இந்தியாவில் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களின் (Foldable Smartphones) மீதான 'க்ரேஸ்' நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இதன்விளைவாக பிளாக்ஷிப் விலைப்பிரிவின் கீழ் (ரூ.1 லட்சம் மற்றும் அதற்கும் மேலான விலையில்) அறிமுகமாகும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே போகிறது. எடுத்துக்காட்டிற்கு கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் (Google Pixel 9 Pro Fold) மற்றும் ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் (OnePlus Open Apex Edition) ஸ்மார்ட்போன்களை கூறலாம். இவ்விரு மாடல்களும் முறையே ரூ.1,72,999 க்கும், ரூ.1,49,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

"மிகவும் அதிகமான விலை நிர்ணயம்" காரணமாக ஃபோல்டபிள் போன்களை வாங்காமல் ஃபிளிப் போன்களின் மீது கவனம் திரும்பும் சூழ்நிலையும் இந்தியாவில் உருவாகியுள்ளது. அதை சரியாக புரிந்துகொண்ட சீன நிறுவனமான ஷாவ்மீ அதன் லேட்டஸ்ட் ஃபிளிப் போனை இந்தியா உட்பட, உலகளவில் அறிமுகம் செய்யவுள்ளது. அதென்ன மாடல்? அது என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

ரூ.27000 கம்மி.. மாஸ் என்ட்ரி கொடுக்கும் Xiaomi MIX Flip போன்!

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ஷாவ்மீ மிக்ஸ் ஃபிளிப் (Xiaomi MIX Flip) ஸ்மார்ட்போனை பற்றித்தான். ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்ட இந்த ஸ்மார்ட்போன் இந்தியா உட்பட மற்ற உலக சந்தைகளிலும் - கூடிய விரைவில் - அறிமுகம் செய்யப்படவுள்ளது. சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும் கூட, ஷாவ்மீ மிக்ஸ் ஃபிளிப்பின் உலகளாவிய விலை நிர்ணயம் குறித்த விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

ஷாவ்மீ மிக்ஸ் ஃபிளிப் என்ன விலைக்கு அறிமுகமாகும்? நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான சுதன்ஷு ஆம்போர், சியோமி மிக்ஸ் ஃபிளிப் ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸ் மற்றும் விலையை எக்ஸ் தளம் வழியாக பகிர்ந்துள்ளார். அதன்படி சீனாவில் சுமார் ரூ.76,220 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஷாவ்மீ மிக்ஸ் ஃபிளிப் போனின் மலேசிய விலை நிர்ணயம் தோராயமாக ரூ.82,537 ஆக இருக்கும்.

சரியான இந்திய விலை நிர்ணயம் வெளியிடவில்லை என்றாலும் கூட இதே போன்ற விலையை நாம் இந்திய சந்தையிலும் எதிர்பார்க்கலாம். இது ஷாவ்மீ மிக்ஸ் ஃபிளிப் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாக இருக்கலாம். இது உண்மையாகும் பட்சத்தில் ஷாவ்மீ மிக்ஸ் ஃபிளிப் ஆனது சாம்சங் மற்றும் மோட்டோரோலா நிறுவனங்களின் லேட்டஸ்ட் ஃபிளிப் போன்களை விட சுமார் ரூ.27,000 மலிவானதாக இருக்கும்.

நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6 (Samsung Galazy Z Flip 6) ஆனது ரூ.1,09,999 க்கும், மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா (Motorola Razr 50 Ultra) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.94,999 க்கும் வாங்க கிடைக்கிறது. இந்தியாவில், ஷாவ்மீ மிக்ஸ் ஃபிளிப் ஆனது பிளாக் கலர் ஆப்ஷனின் கீழ் மட்டுமே அறிமுகம் செய்யப்படுமா அல்லது சீனாவை போல ஒயிட் மற்றும் பர்பிள் கலர்களிலும் அறிமுகம் செய்யப்படுமா என்பதில் தெளிவு இல்லை.

ஷாவ்மீ மிக்ஸ் ஃபிளிப் என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இது 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.86-இன்ச் 1.5கே டிசிஎல் சி8+ எல்டிபிஓ இன்டர்னல் டிஸ்பிளே மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 4-இன்ச் 1.5கே டிசிஎல் சி8+ அவுட்டர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ஒப்பீட்டளவில் இது சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6 ஸ்மார்ட்போனை விட பெரிய டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, ஷாவ்மீ மிக்ஸ் ஃபிளிப்பில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட் உள்ளது. இதே சிப்செட் தான் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6, கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6, விவோ எக்ஸ் ஃபோல்ட் 3 ப்ரோ, ஷாவ்மீ 14 அல்ட்ரா மற்றும் பலவற்ற்றிலும் உள்ளது.

ஓஎஸ்-ஐ பொறுத்தவரை ஷாவ்மீ மிக்ஸ் ஃபிளிப் ஆனது ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாகக் கொண்ட ஹைப்பர்ஓஎஸ்-ன் கீழ் இயங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை இது லைக்கா ஆதரவு கொண்ட 50எம்பி லைட் ஃப்யூஷன் 800 ப்ரைமரி சென்சார் மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸுடன் இணைக்கப்பட்ட 50எம்பி ஆம்னிவிஷன் OV60A40 சென்சாரை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் உடனான 4780mAh பேட்டரியை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi MIX Flip Global Launch Soon Price in India Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X