மொத்த மார்கெட் அதிருது.. DUAL டிஸ்பிளே.. 16GB ரேம்.. OIS கேமரா.. 5165mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த மார்கெட்டும் அதிரும்படி டூயல் அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், லெய்கா சம்மிலக்ஸ் லென்ஸ் கேமரா, ஓஐஎஸ் டெக்னாலஜி, 5165mAh பேட்டரி, 67W சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்ட மாடலாக சியோமி மிக்ஸ் ஃபிளிப் 2 (Xiaomi MIX Flip 2) வெளியாகி இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்டாக கிடைக்கும் இந்த சியோமியின் முழு பீச்சர்கள், விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சியோமி மிக்ஸ் ஃபிளிப் 2 அம்சங்கள் (Xiaomi MIX Flip 2 Specifications): இந்த சியோமி மாடலில் ஓம்னிவிஷன் ஓவி50இ (OV50E) சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) சென்சார் மற்றும் லெய்கா சம்மிலக்ஸ் லென்ஸ் (Leica Summilux Lens) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. மேக்ரோ போகஸ் சப்போர்ட் கொண்ட 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது.

இந்த டூயல் கேமராவில் 8K வீடியோ ஷூட் கிடைக்கிறது. அதேபோல 32 எம்பி செல்பீ ஷூட்டரில் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. லெய்கா சம்மிலக்ஸ் லென்ஸ் கிடைப்பதால், அதற்கான பீச்சர்கள் பேக் செய்யப்பட்டுள்ளன. ஆகவே, கேமராவில் பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம். 6.86 இன்ச் (2912 x 1224) அமோலெட் (AMOLED) மெயின் டிஸ்பிளே கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவில் 3200 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. மேலும், ஓடிடி பிரியர்களுக்கு ஏற்ப 1.5K ரெசொலூஷன், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கிடைக்கிறது. 4.01 இன்ச் (1392 x 1208) அவுட்டர் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரெட், 3200 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.
இதிலும் எச்டிஆர்10பிளஸ், டால்பி விஷன், 1.5K ரெசொலூஷன் வருகிறது. ஆகவே, அவுட்டர் டிஸ்பிளேவிலும் பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம். 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட் வெளியாகி இருக்கிறது. சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) பேக் செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் ஸ்னார்டிராகன் 8 எலைட் (Octa Core Snapdragon 8 Elite) சிப்செட் மற்றும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஃபிளிப் மாடலாக இருந்தாலும், பேட்டரியில் பட்டையை கிளப்பி இருக்கிறது. 5165mAh பேட்டரி மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.
மேலும், 50W வயர்லெஸ் சார்ஜிங் வருகிறது. இந்த பேட்டரியுடன் 7.57 எம்எம் தடிமன் வருகிறது. போல்டு செய்த பிறகு 15.87 எம்எம் தடிமன் வருகிறது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஆன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இப்போது, விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.71,634ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.77,591ஆகவும் இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.87,142ஆக இருக்கிறது. இந்த விலை சீனாவின் யுவான் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. இப்போது, சீனாவில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications