Home
Mobile

தீப்பெட்டி சைஸ்ல இருக்குற போன்ல 5100mAh பேட்டரி-ஆ.. Flip Phone மார்க்கெட்டை தெறிக்க விடப்போகும் ஷாவ்மீ!

இந்த முறை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால் அறிமுகம் செய்யப்பட்டால் தரமாக இருக்கும்; சாம்சங் உட்பட சந்தையில் உள்ள மற்ற கிளாம்ஷெல் போல்டபிள் போன்களுக்கு கடும் போட்டியாக இருக்கும். அது ஷாவ்மீ மிக்ஸ் பிளிப் 2 (Xiaomi Mix Flip 2) ஸ்மார்ட்போனாகும்.

ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் பல முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆகிவிட நிலையில், தற்போது இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி மற்றும் சார்ஜிங் திறன்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. கூடவே ஷாவ்மீ மிக்ஸ் பிளிப் 3 ஸ்மார்ட்போனின் சாத்தியமான லான்ச் டைம்லைன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Flip Phone மார்க்கெட்டை தெறிக்க விடப்போகும் ஷாவ்மீ!

ஷாவ்மீ மிக்ஸ் பிளிப் 2 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டுடன், கடந்த ஜூலை 2024 இல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஷாவ்மீ மிக்ஸ் பிளிப் (Xiaomi Mix Flip) ஸ்மார்ட்போனுக்கு அடுத்தபடியாக வரும் இந்த போன், டூயல் செல் 5100mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

இது உண்மையாகும் பட்சத்தில், ஷாவ்மீ மிக்ஸ் பிளிப் 2 ஆனது, ஒரு பிளிப் போனில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய பேட்டரியை பேக் செய்யும் முதல் மாடலாக இருக்கும். கூடவே ஷாவ்மீ மிக்ஸ் பிளிப் 2 ஸ்மார்ட்போன் ஆனது 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும், இது நீர் எதிர்ப்பிற்கான ஐபிஎக்ஸ்8 ரேட்டிங்கை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் (Qualcomm's Snapdragon 8 Elite SoC) மூலம் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1.5K ரெசல்யூஷன் உடனான 6.85 இன்ச் LTPO OLED இன்னர் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.

கேமராக்களை பொறுத்தவரை இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். அதில் 50 மெகாபிக்சல் 1/1.5-இன்ச் ப்ரைமரி சென்சார் மற்றும் 50 மெகாபிக்சல் 1/2.76-இன்ச் அல்ட்ரா-வைட் ஷூட்டரை பேக் செய்யலாம். கடைசியாக இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாவ்மீ மிக்ஸ் பிளிப் 2 எப்போது அறிமுகமாகும்? இது இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (Q2), அதாவது 2025 அம ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் சீனாவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில தகவல்கள் இது மே மாதம் அறிமுகமாகும் என்று கூறுகின்றன. ஆனால் இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்வி குறி தான்!

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிப்ஸ்டர் பாண்டாஃப்ளாஷ் (@PandaFlashPro) வழியாக கிடைத்த தகவலின்படி, கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஆனது முந்தைய மாடல்களில் இருப்பதை விட மென்மையான மற்றும் அதிக "நீடித்த ஹிங் மெக்கானிசம்" உடன் வரும்.

மேலும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஆனது பழைய மாடல்களுடன் ஒப்பிடுகையில் சற்றே பெரிய வேப்பர் சேம்பர் உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் கூட இந்த புதிய மாடலில், பழைய மாடல்களில் இருப்பதை போலவே டேப்லெட் வடிவ ஸ்பீக்கர் டிசைன் மற்றும் பட்டன் சிஸ்டமையும் தக்கவைக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்!

மேலும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஆகியவைகள் ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான ஒன் யுஐ 7.1 வெர்ஷன் கொண்டு டெஸ்ட் செய்யப்படுவதாகவும் இந்த டிப்ஸ்டர் கூறியுள்ளார். டிஸ்பிளேவை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஆகிய இரண்டும் 2,600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங் கிளாம்ஷெல் டிசைன் உடன் வரும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஆனது இன்னும் அறிவிக்கப்படாத இன்-ஹவுஸ் எக்ஸிநோஸ் 2500 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி மற்றும் 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்களுடன் வரலாம். சாம்சங், தனது ஏழாவது தலைமுறை போல்டபிள் ஸ்மார்ட்போன்களின் உற்பத்தியை இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Mix Flip 2 Could be Flip Phone To Pack Largest 5100mAh Battery
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X